என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "priest arrested"
- விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
- கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் ரதி மன்மதன் கோவில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தனவேல் (வயது 40) என்பவர் இந்த கோவிலில் பூஜை செய்து வந்தார்.
நேற்று வழக்கம் போல காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் உள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டு இருந்த தைதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமையில் அந்த அமைபினர் திரண்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பாண்டுரங்கன் என்பவர் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
கோவில் பூசாரி சந்தனவேலே கோவில் சிலையை உடைத்தது தெரியவந்தது. சந்தினவேல் பூஜை செய்யும் போல அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்தனராம். இதனால் அந்த இளைஞர்களை தண்டிக்குமாறு சந்தினவேல் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளார்.
தொடர்ந்து இளைஞர்கள் கிண்டல் செய்ததால் அவர்களது தொல்லை தாங்க முடியாமல். வெறுப்புடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் மது போதையில் சாமி சிலையை அடித்து உடைத்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து பூசாரி சந்தினவேலுவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் வைத்த வேண்டுதலை சாமி நிறைவேற்றாததால் சிலையை உடைத்தேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
- ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மங்களூரில் இருந்து இந்த ரெயில் காலை 8 மணியளவில் புறப்படும். அதேபோன்று சம்பவத்தன்றும் சென்னைக்கு புறப்பட்டது.
இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்தனர். மங்களூர் பண்ட்வால் பகுதியை சேர்ந்த ஜாஜிஸ் (வயது45) என்பவரும் பயணம் செய்தார். இவர் கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார்.
அந்த ரெயில் காஞ்சங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாதிரியார் ஜாஜிஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண், தன்னுடன் பயணித்த கணவரிடம் தெரிவித்தார். அதுபற்றி கேட்டபோது பாதிரியார் அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து பாதிரியாரை சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணின் கணவர் பிடித்தார். பின்பு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.
- சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
நாகர்கோவில்:
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியார். இவர் பெண்களுடன் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளை.ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதன் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் 2-வது கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் சைபர் கிரைம் போலீசார் பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அவரது லேப் டாப்பில் இருந்த புகைப்படங்கள் குறித்த விவரங்களை அவர் தெரிவித்து இருந்தார். ஒரு பெண்ணை காதலித்ததாகவும் பாதிரியாராக இருந்ததால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. எனவே நண்பர்களாக பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார். அதே பதிலையே தற்பொழுதும் அவர் அளித்துள்ளார்.
அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு இன்று மாலை பாதிரியார் பென டிக்ட் ஆன்றோ மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் உள்ள வழக்கில் பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம் பாளையம் கிராமத்தில் வண்டித்துரை கருப்புச்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மண்ணச்சநல்லூரை சேர்ந்த தனபால் (வயது 55) நடத்தி வந்தார்.
இந்த கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது பிடிக்காசு வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் மாவட்டம் நன்னியூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (60), கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராஜவேல் (55), பின்னாத்தூர் பூங்காவனம் (50), சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரம் காந்தாயி (38), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கோனாட்சி மரம் சாந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புள்ளான்குளம் ராமர் (50), விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி வள்ளி (35) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.
12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு திருச்சி கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து துறையூர் போலீசார் கோவில் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் சிவராசு கூறுகையில், கோவிலில் பிடிகாசு தீரப்போவதாக பக்தர்களிடம் திடீரென வதந்தி பரவி உள்ளது. அதை நம்பி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சிலர் முண்டியடித்து உள்ளே செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் கோவிலாக இருந்தாலும் விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார்.
கைதான பூசாரி தனபால் அடிப்படையில் டெய்லர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணச்சநல்லூர் பகுதியிலும், துறையூர் நகரின் ஒரு பகுதியிலும் இதே போல் கருப்புசாமி கோவில் நடத்தி வந்துள்ளார். கோவில் நடத்திய இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தையம்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை நடத்தி வந்துள்ளார்.
நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கைதான பூசாரி தனபால்
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை அடுத்த மல்லப்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பே பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
திருமணத்திற்கு பிறகு இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க அந்த பெண் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பாவ மன்னிப்பு அறிக்கையிட்டார். பாவமன்னிப்பு கேட்ட பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.
மேலும் 3 பாதிரியார்களும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி. மேத்யூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிரியார்கள் 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ 2 நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பாதிரியார்களும் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதில், பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ என்பவர் கோழஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்றனர்.
அங்கு மறைந்திருந்த பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கோழஞ்சேரி தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவல்லா முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இன்னும் 2 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்