என் மலர்
நீங்கள் தேடியது "Prime Minister's Office"
- 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
- இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
யார் இவர்?
நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.
மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
- 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
- இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.
- அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார்
- பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு அருவருப்பூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோண்ட்வானா எக்ஸ்பிரசில் பி-9 பெட்டியில் கீழ் இருக்கையில் தனது 7 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களுக்கு மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் மீது சிறுநீர் படிந்துள்ளது. உடனே தனது கணவரிடம் முறையயிட்ட அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் குவாலியர் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசார் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்ததை கேட்டறிந்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றார்.

அந்த ராணுவ வீரர் ரயிலில் தொடர்ந்து பயணித்த நிலையில் இறுதிவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க்காததால் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
- பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
- 'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.
வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போரட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்தது. இதற்கிடையே போராட்டத்துக்கு காரணமான இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துள்ளது.
ஆனாலும் போராட்டம் ஓயாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த இணையதளங்களில், 'ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள்' என்றும் 'இது இனிமேல் போராட்டம் அல்ல போர்' என்றும் சிவப்பு எழுத்துக்களால் ஹேக்கர்கள் மேற்கோள் காட்டிய வாசகங்கள் திரையில் வருகின்றன.
ஹேக்கர்கள் விடுத்துள்ள பிரகடனத்தில், 'திறன் மிக்க மாணவர்களால் அமைதியான வழியில் நடந்தப்பட்ட போராட்டத்தை அரசு மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து வன்முறையாலும் கொலைகளாலும் ஒடுக்க முயன்றுள்ளது. இனி இது வெறும் போராட்டம் இல்லை. நீதிக்கான, சுதந்திரத்துக்கான, எதிர்காலத்துக்கான போர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ' மற்ற ஹேக்கர்கள், பத்திரிகையாளர்கள், இன்டலிஜென்ஸ் நிபுணர்கள் எண்களின் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும், உங்களிடம் உள்ள திறனும், தழுவலும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு தேவை. வேடிக்கை பார்ப்பதற்கான காலம் முடிந்துவிட்டது' என்றும் "THE R3SISTANC3" கும்பல் ஹேக்கர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹேக்கர்களின் அந்த பிரகடனத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில், இரண்டு நாயுடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் உள்ளிட்ட இமெயில்களை அனுப்பியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்துக்கு போலி மிரட்டல் விடுத்து 100 ஈமெயில் வரை அனுப்பிய இளைஞர் போலீசில் பிடிப்பட்டுளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ் என்ற நபர் பிரதமர் அலுவலகம், ரெயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்திருக்கிறார். பயங்கரவாதத்தை குறித்து எழுதிய டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் (Terrorism: A Demonic Storm) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ஜெகதீஸ் எழுதியுள்ளார்.
இதை வெளியிடுவதற்கான முயற்சியில் மிரட்டல் விடுக்கும் ஈமெயில்களை அவர் அனுப்பத்தொடங்கியுள்ளார். முதலில் தனது புத்தகத்தை வெளியிட உதவுமாறு பிரதமர் அலுவகத்துக்கு மெயில் அனுப்பிய அவர் அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.