என் மலர்
நீங்கள் தேடியது "production"
- மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
- அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .
இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
6 லட்சம் மீன் குஞ்சுகள்
நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்
எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன
திருப்பூர்
திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.
- உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவ தால் உப்பு உற்பத்தி அதி கரித்துள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாட்டு உப்பு நிறுவனம் வாலிநோக்கம் பகுதியிலும், தனியார் உப்பு உற்பத்தி நிறு வனங்கள் மூலம் திருப்புல்லாணி, தேவிபட்டினம், நதிப்பாலம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.உப்பு உற்பத்தி காலம் வட கிழக்கு பருவமழை முடிந்த பின் மார்ச் முதல் அக் டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.
உப்பளங்களில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை காலங்களில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதி கரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.
ராமநாதபும் மாவட்டத்தில் ஒரு சீசனில் 2.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். உப்பு உற்பத்தியில் மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் 29 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தற்போது வெப்பம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தியும் அதிக ரித்திருப்பதால் உற்பத்தி யாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
தற்போது உப்பளங்களில் உப்பு மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. டன் உப்பு சில மாதங்களுக்கு முன் வரை டன் ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ 1200 முதல் ரூ 1600 வரை விற்பனை ஆகிறது. தற்போதுள்ள விலைவாசி மற்றும் கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட வைகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை போதுமானதாக இல்லை. ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீசன் முடிய சில மாதங்களே உள்ள நிலை யில் உப்பளங்களில் தொழி லாளர்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது உரிமையாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது.
- 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
- காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.
- விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும்.
- ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும்
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்துக்கு உட்பட்ட கோட்டமங்கலம் பகுதியில் உள்ள பாசிப்பயறு கோ 8 ஆதார நிலை 1 விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயத்தில் விதைப்பு முதல் விளைச்சல் வரை விதையின் பங்கு இன்றியமையாததாகும். பசுமைப்புரட்சிக்குப்பிறகு பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை பூர்த்தி செய்ததிலும், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதற்கும் நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் அளித்த ரகங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு தரமான விதைப்பண்ணைகள் அமைத்து, வயலாய்வுகள் மேற்கொண்டு பெறப்பட்ட சான்று செய்யப்பட்ட விதைகள் முக்கிய காரணமாக இருந்தன. ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரமாகும். தற்போது ஆதார நிலை விதைப்பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாசிப்பயறு கோ 8 ரகமானது 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற பாசிப்பயறு ரகங்களுடன் ஒப்பிடும் போது 55 முதல் 60 நாட்களில் வளர்ந்து ஏக்கருக்கு 340 கிலோ மகசூல் தரக்கூடியது.
ஒரு செடிக்கு 20 முதல் 25 காய்களுடனும், ஒரு காய்க்கு 10 முதல் 14 விதைகள் உடன் 1000 தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி தண்டு துளைப்பான், மஞ்சள் மொசைக் வைரஸ் மற்றும் வேர் அழுகல் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. விதைப்பண்ணை பூ பருவத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது விதை ஆதாரம், பயிர் விலகு தூரம், கலவன்கள் சதவீதம், வயல் தரம் உள்ளிட்ட காரணிகள் ஆய்வு செய்யப்படும். கலவன்கள் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் ஆதார நிலை விதை பண்ணைக்கு 0.1 சதவீதம் , சான்று நிலைக்கு 0.2 சதவீதம் இருக்குமாறு வயல் தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு வயல் தரங்கள் பராமரிக்கப்படாத விதை பண்ணைகள் தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் சரவணன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
- இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
- உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்
கரூர்மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பா ளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் கரும்பு கள் ஆலைகளில் வெல்லங்க ளாக காய்ச்சி எடுக்கப்பட்டு அருகா மையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
இங்கு வாங்கப்படும் வெல்ல சிப்பங்களை லாரிகளில் ஏற்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைப்பர்.
கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,170 வரையிலும் விற்பனையானது. நேற்று உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,220 வரையிலும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது.
- உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
- கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.
அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சல்மான் கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தும் உள்ளார்.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார்.
கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார். இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதற்கிடையே சல்மான் கானை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஹிந்தியில் தெறி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்தும் உள்ளார். படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அட்லீ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
- இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சிதொடங்கியது. இந்த கண்காட்சி குறித்து திருப்பூர் அனைத்து ஏற்றுமதி வர்த்தக அமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறும்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வெளிநாட்டு வர்த்தக முகமைகளின் (பையிங் ஏஜென்சி) மூலமாக வர்த்தகம் செய்கிறார்கள். பெரும்பாலான ஏற்றுமதியாளருக்கு நேரடி வர்த்தகம் செய்யும் அளவுக்கு சர்வதேச சந்தை விவரம் முழுமையாக தெரியவில்லை. உற்பத்தியை தரமாக மேற்கொண்டாலும், மார்க்கெட்டிங் தொழில் திறன் குறைவு. வர்த்தக முகமைகளை அவர்கள் சார்ந்துள்ளனர். புதிய வாய்ப்புகளை உருவாக்க வர்த்தக முகமைகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அனைவரும் இணைந்து 'பிராண்ட் திருப்பூர்' என்பதை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரக்கொள்கையை பின்பற்றி 'பிராண்ட் திருப்பூர்' என்ற பெயரில் புதிய பிராண்ட் உருவாக்கப்படும்' என்றார்.
டெல்லியை சேர்ந்த வர்த்தக முகமை அமைப்பின் ரோகிணி சூரி கூறும்போது, 'வர்த்தக முகமையுடன் இணைந்து கண்காட்சி நடக்கிறது. புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மார்க்கெட்டிங் முக்கியம். சரியான சந்தைப்படுத்துதல் அமைந்துவிட்டால் வெற்றி எளிதில் கிடைக்கும். அதற்கு வர்த்தக முகமைகள் உதவ முன்வந்துள்ளன என்றார்.
டெல்லி வர்த்தக முகவர் சஞ்சய் சுக்லா கூறும்போது, சாதகமான சூழல் நிலவுவதால் தற்போதைய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள், சார்பு நிறுவனங்கள், செலவினங்களை குறைத்து உற்பத்தியை பெருக்க வேண்டும். உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் அரசு சலுகைகளை பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
நிப்ட் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் ரோகித் கூறும்போது, திருப்பூர் நகரம் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் பனியன் தொழில்களை நடத்தி வருகிறது. சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் திருப்பூருக்கு வரப்போகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கைத்தறி ஆடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி அமைப்பின் தலைவர் அஜய் அகர்வால் கூறும்போது, 'பின்னலாடைத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நிறுவனங்கள், சீனாவில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளன. போட்டி நாடுகளுக்கான ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.
- மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
- பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்.
பேராவூரணி:
பேராவூரணி வேதாந்தம் திடலில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "இடப்பங்கீடு எமது உரிமை விழிப்புணர்வு மாநாடு" நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை சாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தஞ்சை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாரதி சதீஷ் வரவேற்றார்.
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்துசிறப்புரை ஆற்றினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்த ரையர்களுக்கு இடப்பங்கீடு வேண்டும்.
அதில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் தனிப்பங்கீடு வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.
இந்த கூட்டத்தில், பேராவூ ரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் அரசு கயிறு தொழிற்சாலை மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படுத்த வேண்டும்.
மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்கிட வேண்டும்.
இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்ப–தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம்வி ளங்குகிறது.
அரசு இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.
இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வகையிலும் மாசு ஏற்படுத்தாத நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
இது முதல்-அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.
எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். தொழில்முனைவோரும்
வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், No:30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ், முதல் தளம், தாந்தோணிமலை கரூர் - 639005. கைபேசி எண்: 9444656445, 9092590486.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.