search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Proprietor"

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
    • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

    அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

    இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

    அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையில் அழகப்பா நகை மாளிகை கடை உள்ளது.அதன் உரிமையாளர் அழகப்பா மணி(வயது 60). சம்பவத்தன்று அழகப்பா மணி தனது கடையில் இருந்து வந்தார். அப்போது அழகப்பா மணியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அழகப்பா மணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அழகப்பா மணியின் சகோதரர் ராஜகோபால் கொடுத்த புகார் கொடுத்தார். அதில் குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில், தனது சகோதரர் அழகப்பா மணியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில்பட்டியை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு திட்டமா?
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசி

    கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது எனவும் அதில் வெம்பக்கோட்டை, சாத்தூர், இணைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் சாத்தூர், வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிவகாசி பட்டாசு என்ற அடையாளம் என்பது அழிந்து விடுமோ என கவலை அடைந்துள் ளனர். அவ்வாறு கோவில்பட்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கோவில்பட்டி மாவட்டம் முழுமையாக அறிவிப்பு வரும் முன்னர் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். தாயில்பட்டி, வெற்றிலை யூரணி, சுப்பிர மணியபுரம், ஆகிய பகுதியை சேர்ந்த வர்கள் வெம்பக்கோட்டை தாலுகா வில் இல்லை. ஆனால் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளனர். சிவகாசி தாலுகாவில் உள்ளனர். சாத்தூர், வெம்பக் கோட்டை ஆகிய பகுதிகள் புதிதாக அறிவிக்கப்படும் கோவில்பட்டி மாவட் டத்துடன் இணைக் கப்படும் என்ற வதந்தி அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

    ×