search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public distress"

    • நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கியது. ஆனாலும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மும்பை, தானே பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது.

    மேலும் தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட், மட்டுங்கா, அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மும்பையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் உள்பட 5 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சார ரெயில் சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இன்று காலையில் தண்டவாளத்தில் தேங்கிய வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பாண்டுப், சியோன் பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மீண்டும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

    மேலும் பஸ் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. பல பஸ்கள் வாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. சாலைகளில் வெள்ளம் தேங்கி கிடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    பல சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் தத்தளிக்கிறார்கள்.

    மும்பை விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    கனமழை காரணமாக மும்பையில் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சதாரா, சாங்லி, கோலாபூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. தானே மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ரிசாா்ட்டில் சிக்கியிருந்த 49 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

    தாதர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முடங்கியது. மும்பை தானே பகுதியில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

    இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10-ந்தேதி வரை மழை தொடரும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

    இதேபோல் வட மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சிராவஸ்தி, குஷிநகா், பல்ராம்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கண்டக், சிராவஸ்தி, ரப்தி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், கிராம மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாநில பேரிடா் மீட்பு படையினா் ஈடுபட்டுள்ளனா்.

    பீகாரில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கடந்த 2 நாள்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 40 போ் உயிரிழந்து விட்டனா்.

    பீகார் மாநிலத்தில் பாயும் கோசி, மகாநந்தா, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

    பிரம்மபுத்திரா உள்பட முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.

    காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் உள்பட 130 வனவிலங்குகள் உயிரிழந்துவிட்டன.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
    • குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.

    இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள்.

    குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.இதன்காரணமாக அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம அலைமோதும்.

    அதன்படி திங்கட்கிழமையான இன்று மனு அளிக்க காலை முதலே முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை அரசு அலுவல் காரணமாக கலெக்டர் வெளியே சென்று விட்டார். ஆனால் பொதுமக்களிடம் மனுக்களை பெற எந்தவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர் இல்லாதபோது அதற்கு அடுத்த தகுதியில் உள்ள அதிகாரிகள் முகாமை நடத்தி மனுக்களை பெறுவது வழக்கம். ஆனால் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    ×