என் மலர்
நீங்கள் தேடியது "Pulwama attack"
- கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்
- கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.
அவரது குடும்பத்திற்கு உதவும் விதமாக கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே ஜின்னா தெருவில் வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய வீட்டினை அவர்களது குடும்பத்தினருக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.
கயத்தாறு பேரூராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கிரடாய் அமைப்பு மாநில செயலாளர் அபிஷேக் முன்னிலை வகித்தனர். கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், கிரடாய் அமைப்பு மாநில தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் சபுரா சலிமா, கிரடாய் அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செயலாளர் முத்துவிஜயன், நெல்லை மாவட்ட தலைவர் சிவக்குமார் தாஸ், செயலாளர் கோவிந்தன், துணை தலைவர் ரமேஷ் ராஜா, ஒப்பந்ததாரர் செய்யது முகம்மது, பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, பேரூர் துணை செயலாளர் குருசாமி, வார்டு கவுன்சிலர்கள் செல்வக்குமார், நயினார் பாண்டியன், செய்யது அலி பாத்திமா, கோகிலா, தேவி, ஆதிலட்சுமி, வக்கீல் மாரியப்பன், கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.
எட்டயபுரம்:
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் இப்ராஹிம், உதவி ஆசிரியை இந்திரா, அ.தி.மு.க. நிர்வாகி ராஜகுமார் உட்பட ஏராளமான பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன.
- முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார்.
செய்துங்கநல்லூர்:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக வல்லநாடு அருகே உள்ள கீழச்செக்காரக்குடி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
போட்டிக்கு ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை டிராகன் வாரியர் பி அணியும், 2-ம் பரிசை புதியம்புத்தூர் முருகன் நினைவு கபடி அணியும், 3-ம் பரிசை டிராகன் வாரியர் சி அணியும், 4-ம் பரிசை அகிலம்புரம் இளைஞர் கபடி அணியும் பெற்றது.
முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார். இரண்டாம் பரிசு 8,000 மற்றும் கோப்பையை கருங்குளம் ஒன்றிய துணை சேர்மன் லட்சுமண பெருமாள் வழங்கினார். கபடி போட்டியில் விளையாடிய அணிகளுக்கு ஆடைகளை பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பையாவும், விளையாட்டு உபகரணங்களை வடக்கு காரசேரி மாடசாமியும் அன்பளிப்பாக வழங்கினார்.
- மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
- நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.
புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-
புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.
இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான்.

இதற்கிடையே இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். மேற்குவங்காள மாநிலம் நாடியாவை சேர்ந்த ராணுவ வீரர் சுதீப் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தார். அவருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுதீப்பின் தாயார் மம்தா பிஸ்லாஸ், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சுதீப்பின் தந்தை உடல்நிலை குறைவால் பங்கேற்கவில்லை. இதே போல புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான மேற்கு வங்காள மாநிலம் ஹவ்ரக்சை சேர்ந்த பப்லூ சாந்த்ராவின் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் பஞ்சாப், இமாச்சலபிரதேச மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் குடும்பத்தினர் தங்களுக்கு மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்றும் தெரிவித்தார்.
மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் மோடி விழாவில் பங்கேற்க இருப்பதாக மம்தாபானர்ஜி அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 56 பேர் அரசியல் படுகொலை செய்யப்பட்டதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இங்கு அரசியல் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் என்னை உங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தடுத்து விட்டது’ என்றார்.
இதற்கிடையே தான் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா தரப்பில் கூறும் போது, ‘உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமை அளிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் உயிர் தியாகத்தை மோடி அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அரசியல் சாயம் பூச முயலும் மம்தா பானர்ஜிக்கு பதிலடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.
அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்பட்ட நிலையில், இந்தியா சில ஆதாரங்களை, பாகிஸ்தான் அரசிற்கு சமர்ப்பித்தது. இந்த கோப்புகளை ஆராய்ந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#PulwamaAttack #PakistanGovernment

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது அகில்தார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது . தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அதில்தார், முதாசிர்கான் இருவருமே ஸ்மார்ட் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.
அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #PulwamaAttack
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. #JKEncounter #MilitantsKilled
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தலையீட்டால் சற்று அமைதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறியிருப்பதாவது:-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் படியும், அந்த மண்ணை பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும்.
எனவே ஜெய்ஷ்-இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கம் மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.
அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இது பற்றி ஆய்வு செய்வோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #DonaldTrump #India #US
