search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal"

    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இந்த இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அதிகாரிகள் வருவதை கண்டதும் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உள்பட 8 பேர் தங்களது உடலில் மண்எண்ணை மற்றும் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், போதிய அவகாசம் அளித்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. பொது மக்களிடம் கோட்டாட்சியர் இப்ராகிம், உதவி பொறியாளர் தயாளன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஜே.சி.பி.எந்திரத்தால் உடைத்து அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
    • புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் அடிக்கடி போலீசார், சிறை வார்டன்கள் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஜெயிலில் தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்கள். இந்த நிலை யில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி (வயது 40) என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இவர் செல்போனை பயன்படுத்தி, ஆள் கடத்த லில் ஈடுபட்டு வருவது சிறை அதிகாரிகள் விசா ரணையில் தெரிய வந்தது.

    மேலும் அழகிரி மீது

    20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார். இதையடுத்து சிறை துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவின்பேரில் நேற்று அழகிரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புழலில் நள்ளிரவில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம்:

    புழல் கேம்ப் பஸ்நிலையம் அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பத் ராம் (49). ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

    நள்ளிரவு அந்த கடையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    செங்குன்றம் பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் வந்தன. அதற்குள்ளாக இரும்புக்கடையில் பற்றிய தீ முழுவதும் பரவியது. கடையின் முன் கதவுகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது தொழில் போட்டியில் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறார்கள்.

    வெளியூரில் உள்ள கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கிருந்து புழல் திரும்புகிறார்.

    புழல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்குன்றம்:

    விருத்தாசலம் விளங்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் மகள் சினேகா(18). இவர்கள் இருவரும் சென்னை ஓட்டேரியில் உள்ள துடைப்பம் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சினேகாவுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்ததால் புழல் லட்சுமிபுரம் ஆதிலட்சுமி நகரில் உள்ள டாக்டர் தாமோதரன் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று சினேகா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். திடீரென அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புழலில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    செங்குன்றம்:

    புழலை அடுத்த லட்சுமி புரம் ராஜாஜி தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த சில நாட்களாக சரரணனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

    இந்த நிலையில் அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானது. இதையடுத்து கடந்த 30-ந் தேதி சரவணனை சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தான். அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து உள்ளது. #Swineflu #Dengue

    புழலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி மற்றும் ஸ்ரீநல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. #SivanthiAditanar
    செங்குன்றம்:

    புழலில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி மற்றும் ஸ்ரீநல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து முன்னிலை வகித்தார்.

    விழாவில் பங்கேற்றவர்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் துணைத்தலைவர்கள் எல்.தாமஸ், எம்.ஏ.திரவியம், கரு.சி.சின்னதுரை, சங்க செயலாளர் எஸ்.செல்லதுரை, கல்வி குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ரத்தனசாமி மற்றும் மீஞ்சூர், செங்குன்றம், அம்பத்தூர் நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள்.

    கல்லூரி செயலாளரும், பள்ளி நிர்வாக இயக்குனருமான எஸ்.கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் மார்க்ரெட்ஜெஷி, பள்ளி முதல்வர் குளோரிஷீலா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #SivanthiAditanar

    புழல், கண்ணிகைபேர் ஏரிகளில் மணல் அள்ள தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை சேர்ந்தவர் வக்கீல் சி.வெங்கடபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    செங்குன்றம், நரவரிக்குப்பம் கிராமத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி இங்கு 20 அடி ஆழத்துக்கு குழிபறித்து மணல் எடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுகின்றனர்.

    இந்த இடத்தில் மணல் அள்ள அனுமதியின் அடிப்படையில், தற்போது புழல் ஏரியில் மணல் அள்ளுகின்றனர். இதற்காக புழல் ஏரியில் வடமேற்கு பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை, ராட்சத மோட்டார் மூலம் வெளி யேற்றிவிட்டு மணலை அள்ளுகின்றனர்.

    இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் ஏராளமான புகார்களை உள்ளூர் மக்கள் கொடுத்தனர். போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், மணல் கொள்ளையர்கள் மீது இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதேபோல, கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்தும் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இங்கு அள்ளப்படும் மணல், பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல், திருவள்ளூர் மாவட்டம், நல்லூர் பஞ்சாயத்தில் உள்ள அத்தன்தாங்கல் கிராமத்தில் குவித்து வைத்துள்ளனர்.

    இந்த சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர், திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு, மாதவரம் துணை கமிஷனர், சோழவரம், செங்குன்றம், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பொன்னேரி, ஊத்துக்கோட்டை தாசில்தார்கள் ஆகியோர் நன்கு தெரிந்து இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘மழை காலங்களில், ஏரிகளில் மணல் அள்ள அதிகாரிகள் எதற்காக அனுமதி வழங்குகின்றனர்? என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, புழல் மற்றும் கண்ணிகைபேர் ஏரிகளில் இருந்து சவுடு, கிராவல், வண்டல் என்று எந்த வகையான மணலும் அள்ளக்கூடாது. இந்த மணலை அள்ளவும், லாரி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச்செல்லவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதிக்ககூடாது’ என்று உத்தரவிட்டனர்.

    மேலும், ‘இந்த வழக்கை தொடர்ந்த வெங்கடபதிக்கு மிரட்டல் இருப்பதாக, அவரது வக்கீல் கூறுவதால், மனுதாரருக்கு முழு பாதுகாப்பை செங்குன்றம் இன்ஸ்பெக்டர் வழங்கவேண்டும். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #MadrasHC

    புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை வாடர்ன் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் முரளி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு முறை முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்கர் முரளிக்கும், சக கைதிகளுக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் பாஸ்கர் முரளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புழல் சிறையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறை தலைமை வாடர்ன் நாகராஜ் மற்றும் சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 
    கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட கேன்சரையும் குணப்படுத்தி, 6 டிப்ளமோ மற்றும் 1 டிகிரி படித்து முடித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரன். இவருக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார் சந்திரசேகரன்.

    சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும், மன உறுதியுடனும் தனக்கு வந்த உயிர்க்கொல்லி நோயை கடந்து புதுவாழ்வு பெற்றார். அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.

    சிறையில் காலத்தை வீணாக்காமல், 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளமோ படிப்புகளையும், ஒரு டிகிரியையும் படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.



    தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பல வருடங்களாக சிறை தண்டனை பெற்ற கைதிகள் தற்போது மனம் திருந்தி, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

    சிறையிலும் கல்வி கற்கும் இவர்கள், உலகின் பலதரப்பினருக்கும் உதாரணமாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் சிறைவாசிகள் என்பதனால் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் சில நிறுவனங்களும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×