என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raja mla"

    • ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காமராஜர், தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.

    புளியங்குடி:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் ராஜா எம்.எல்.ஏ. நேற்று புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு புளியங்குடி காமராஜர் சிலை முன்பு நகரச் செயலாளர் அந்தோணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து காமராஜர் சிலை, காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ராஜா எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார். நிகழ்சியில் புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. , பொதுக்குழு உறுப்பினர்கள் பத்திரம் சாகுல்ஹமீது, வேல்சாமி பாண்டியன், துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, கவுன்சிலர்கள் பொன்னுதுரைச்சி, கார்த்திக், உமாமகேஷ்வரி, ராஜேஸ்வரி, வள்ளி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், அருணாசலம் மற்றும் காஜா மைதீன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், தி.மு.க. நிர்வாகிகள் தம்பிதுரை, குரூராஜ், விக்ரம் மணிகண்டன், மைதீன், அருணாசலம், அய்யனார், சுப்பு, குழந்தை ராஜ், சேதுராமன் மீனாட்சி சுந்தரம், மணிமாறன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
    • வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் மாவட்ட 2-ம் துணை ஆளுநர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் நூலகர் முருகன் வரவேற்றார்.

    சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பாரதி வாசக வட்டம் கவுரவ ஆலோசகர் வெள்ளைச்சாமி என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.

    மெய்நிகர் நூலக தொழில்நுட்ப கருவியின் மூலம் உலகத்தின் மிக முக்கியமான இடங்கள், நாடுகள், கண்டங்கள், மலைகள், அருவிகள், கடல்கள் உள்ளிட்ட பல செய்திகளை இதன் மூலம் 360 டிகிரியில் பார்க்க முடியும். இதை காணும் பொழுது நேரில் காண்பது போல் உணர முடியும். இதனால் மாணவர்களின் கல்வி தரமும் உயரும்.

    இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், நூலகர் சிவகுமார், நூலக ஆய்வாளர் கணேசன், பாரதி வாசகர் வட்டம் செயலாளர் நாராயணன், ஆசிரியர் இளங்கோ கண்ணன், வேணுகோபால் என்ற கண்ணன், நூலகர்கள் சண்முகவேல், அப்துல்காதர் ஜெய்லானி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி, கவுன்சிலர்கள் வேல்ராஜ், விஜயகுமார், நாராயணன், தி.மு.க.வை சேர்ந்த சம்பத், அன்சாரி ஜெயக்குமார், பிரகாஷ், ஆதி, பாரதிராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    இதில் தி.மு.க. தலைவராக மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வடக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிப்பது எனவும், 15-ம் கழகப் பொதுத் தேர்தலில் வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சருக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணியை (பிஎல் ஏ 2) சிறப்பாக செய்ய வேண்டும் எனவும், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியை துரித படுத்த வேண்டும் எனவும், நவம்பர் 27-ல் பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், ஒன்றிய, நகர, பேரூர், கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டங்களை தென்காசி வடக்கு மாவட்டத்தில் சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், திராவிட மாடல் பாசறை கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும், தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்காசி வடக்கு மாவட்ட கழகத்தின் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெற அனைத்து நிர்வாகிகளும் தீவிர முயற்சியோடு களப்பணி ஆற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, மதிமாரிமுத்து, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மதுரை, முத்தையாபாண்டியன், பூசைபாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவதாஸ், மாரிச்சாமி, பராசக்தி, பா.மாரிச்சாமி, சாகுல்ஹமீது, வேல்சாமிபாண்டியன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவேங்கடம் மாரிமுத்து, ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ராயகிரி சேர்மன் இந்திரா விவேகானந்தன், சிவகிரி சேர்மன் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள கிருஷ்ணா ஹாலில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார்.

    தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதாமுன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். வெற்றிவிஜயன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தென்காசி எம்.பி. தனுஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாளை நலத்திட்ட நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும், தி.மு.க. இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சரின் திட்டங்களை ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும், தெருமுனை பிரசாரம் என்பது பொதுமக்களிடம் எளிதாக செல்லும் முறை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு தற்போது இருந்தே பணியை தொடங்கி தி.மு.க.வை வெற்றி பெற கடமையாக உழைக்க வேண்டும்.

    வரும் 18-ந்தேதி கழகத்தின் இளைஞரணி செயலாளர் அறிவித்துள்ளபடி வாசுதேவநல்லூர் தொகுதி தேவர் மண்டபத்தில் திராவிட பாசறை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 -ந்தேதி சங்கரன்கோவிலில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .

    கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்ட கழகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைவரும் இணைந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் மூத்த முன்னோடிகள் அண்ணாவிப்பன், சோமசெல்வபாண்டியன், இளைஞரணி சரவணன், திலீப்குமார், வர்த்தக அணி முனியசாமி, சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, வீமராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார் இளைஞரணி பசுபதிபாண்டியன், மாணவரணி கார்த்திக், நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட தொண்டரணி முத்து மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.

    • தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • நமது மாவட்டத்தின் பெருமையினை முதல்-அமைச்சர் நெஞ்சில் நீங்காத வண்ணம் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சுமதி, பேரூர் அவைத்தலைவர் துரைராஜ், வார்டு கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றம் புல்லட் கணேசன், சி.எஸ்.மணி, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், மணிகண்டன், விக்கி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற டிசம்பர் 8-ந்தேதி தென்காசிக்கு வருகை தர உள்ளார். ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள் வழங்கி முடித்த பின்னர் மதுரைக்கு செல்லும் வழியில் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் மற்றும் மாவட்டத்தின் கடைசி எல்கையான சிவகிரி ஆகிய பகுதிகளில் ஏராளமான தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து தி.மு.க. கட்சி பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்த நமது மாவட்டத்தின் பெருமையினை முதல்-அமைச்சர் நெஞ்சில் நீங்காத வண்ணம் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ., தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளர் ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறியுள்ளதாவது:-

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும்.

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரெயிலை மதுரை, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.

    நெல்லை, தாம்பரம் ரெயிலுக்கு சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தமும், நெல்லை, பாலக்காடு பாலருவி ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தமும் வழங்க வேண்டும். முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடை மேடைகளுடன் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் கூறினார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கூறினார் என தெரிவித்தார்.

    • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
    • உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    தங்க மோதிரம்

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். 15-வது வார்டில் வார்டு செயலாளர் வீராசாமி ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் புனிதா ஏற்பாட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் வசதிக்காக வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சியும், பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சுகர் போன்றவைகள் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணி விக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கரன் கோவில் டி.டி.டி.ஏ. சிறப்புப் பள்ளியில் கணேசன், ராஜவேல், முருகன், முத்து மணிகண்டன் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சீருடைகள்

    அதைத்தொடர்ந்து அம்பேத்கர் நகர் பகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது.

    அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    உதயநிதி எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி மற்றும் மருத்துவத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வியை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் அயராது உழைத்து வருகின்றார். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்குமார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி நகராட்சி கவுன்சிலர்கள் ராமு விஜயகுமார், வேல்ராஜ் ராஜா, ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், இளைஞர் அணி சரவணன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார், வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், வெள்ளத்துரை, சரவணன் மற்றும் கார்த்தி குட்டி, செல்வம், அன்சாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்தார்.
    • பரிபூரணத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்தார்.

    அதை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கியிருந்தார்.


    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைபாட்டால் பரிபூரணம் உயிரிழந்தார். இந்நிலையில் பரிபூரணம் அரசு வேலையில் இருந்தபோது மறைந்ததால் அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தேவநேயப் பாவாணர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவநேய பாவாணர் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    • முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்குவதற்கு வருகிற 8-ந்தேதி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் குறித்த 5 பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, ராமச்சந்திரன், பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சேர்மன் பாலசுப்ரமணியன், உதயகுமார், ராயல் கார்த்திக், சதீஷ், வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் பிரபாகரன், சுப்புத்தாய், சண்முகராஜ், அலுவலக செயலாளர் சூரிய நாராயணன், இளைஞரணி பிரகாஷ், சங்கர், வீரமணி, கேபிள் கணேசன், ராஜவேல், பாரதி, கணேஷ், ஜெயராணி, இளைஞர் அணி பசுபதி பாண்டியன், தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி, துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

    நாளை தென்காசி மாவட்டத்திற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை நாம் வரவேற்றதை பார்த்து மற்ற மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்தீர்கள் என்று கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

    புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமணி விலக்கில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் கட்சி கொடி ஏற்ற உள்ளார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் சீருடை அணிந்து உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். தென்காசியில் நிகழ்ச்சி முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட பகுதியில் மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் வரும் வழியில் 14 மேடைகள் அமைக்கப்பட்டு அங்கு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் அனைவரும் இணைந்து முதல்-அமைச்சருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு விழாவை தலைமை கழகம் அறிவித்தது போல சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    புளியங்குடி:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலதிட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தென்காசி மாவட்டதிற்கு நாளை வருகிறார்.

    துண்டுபிரசுரம்

    இந்நிலையில் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் கமீது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    பிரசார வாகனம்

    மேலும் முதல்-அமைச்சரின் வருகையை தெரிவிக்கும் வகையில் பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் யானை கோமதிக்கு ஷவர் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது
    • சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் யானை கோமதிக்கு ஷவர் குளியலறை மற்றும் ராட்சத மின்விசிறி வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை ராஜா எம்.எல்.ஏ. கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இளைஞரணி சரவணன் மற்றும் வீரா, வீரமணி சிவசங்கரநாராயணன், பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×