என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rajat Patidar"
- இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
- இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.
தர்மசாலா:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.
அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி
பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.
தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.
தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
பெங்களூர் அணி
இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.
முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.
எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.
பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது.
- ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரஜத் பட்டிதார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார். ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.
ஒருவேளை ரஜத் பட்டிதாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் மற்றும் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்.
அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. அது இளம் வீரர்களும் மோசமான தருணத்தை சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ள இந்திய அணியின் கலாச்சாரத்தை எனக்கு காண்பிக்கிறது.
இவ்வாறு ஏபிடி கூறினார்.
- நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
- குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.
விசாகப்பட்டினம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
என்று படிதார் கூறினார்.
- இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
- இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். விராட் கோலிக்கான மாற்று விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
- ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெங்களூரு:
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை கோப்பயை வெல்ல ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரஜத் படிதார் விலகுகிறார் என ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவில்,
துரதிருஷ்டவசமாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023-ல் இருந்து ரஜத் படிதார் வெளியேறுகிறார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்