search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajendra Balaji"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவு.
    • மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி அளவில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இதைதொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால், வெளிநாடு செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
    • பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில், தந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், தவசிலிங்கம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக வழக்கு.
    • விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவதாகவும், எனவே அந்த விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் உத்தரவிடப்பட்டது.

    • தி.மு.க. விளம்பர ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
    • தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஸ் நிலையம் அருகே விருதுநகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழுக்கு மரியாதை செய்தவர் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் விருதுநகர் சங்கரலிங்க நாடார். உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத்தை மதித்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அண்ணா. கருணாநிதி தனது குடும்ப நலனுக்காக கட்சியை கைப்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலினை சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை.

    சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.379 கோடியில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரூ447 கோடியில் விருதுநகர்-அருப்புக்கோட்டையில் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், வத்திராயிருப்பில் புதிய தாலுகா அலுவலகம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டது. ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி உள்ளது. தி.மு.க. ஆட்சி விளம்பர ஆட்சி. இது நிரந்தரமாகாது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும். நீங்கள் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயி னார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம்.
    • ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவரது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உள்ளது.

    ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம். அவர் விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    அதே நேரத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்ல ராஜேந்திர பாலாஜி அனுமதி கேட்டதற்கு சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் அ.தி.மு.க.வினர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.

    சிவகாசி

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி குலதெய்வ கோவிலான மூலிப்பட்டி தவசலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்கை வெட்டி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து நாளைய பாரதம் அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். தொடர்ந்து மருத்துவ முகாம், லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது கூறியதாவது:-

    ஆதரவற்றோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு நாம் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். பொது வாக கொடுக்கின்ற கட்சி என்று சொன்னால் அது அ.தி.மு.க.தான்.

    ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோசப் படக்கூடிய கட்சி அ.தி.மு.க.. அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள். அ.தி.மு.க.தொண்டர்கள் எப்போதுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறந்தநாள் விழாவின் போது ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.வினர் தங்களால் முடிந்த அளவு ஏதாவது ஒரு உதவி செய்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லி புத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட துணை செயலாளர் அழகுராணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜ அபினேசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நாளைய பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பாலபாலாஜி, மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்குமார், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நடிகர் பிரபாத்.

    மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், சித்துராஜபுரம் பாலாஜி, விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாணடியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரிமுத்து, சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் கலைச்செல்வி, ராஜபாளையம் மகளிரணி ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனைகளை சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய் விட்டார்கள்.

    அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். அ.தி.மு.க.வுக்கு 96-ல் ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் வைஸ் சேர்மனாக வெற்றி பெற்றேன்.

    சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இங்கிருந்த பலபேர் வேறு இடத்திற்கு சென்றிருப்பார்கள்.

    பழத்தோட்டத்தை நாடி அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். ஆனால் நாம் தோட்டக்காரர்கள். நாம் நல்ல விதைகளை விதைத்து, விளைவித்து தோட்டத்தை பாதுகாக்க முடியும். பழங்களை உற்பத்தி செய்ய முடியும். ஆகையால் பழத்தோட்டக்காரர்களாக நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனை ஆதரித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கடந்த 18 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் வி.வெங்கடாசலபுரம், வாலசமுத்திரம் உட்பட 32 கிராமங்களில் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

    அவர்கள் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது பெண்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எடப்பாடியார் அரசிற்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளருக்கு நீங்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. மக்கள் விரோத கட்சி. மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது.

    அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் ரூ.22 கோடியை வாங்கிக்கொண்டு ஓடி விட்டார். உங்களுக்கு துரோகம் செய்த அவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    எடப்பாடியார் அரசுக்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்குவாக்களிக்க வேண்டும் என்றார்.

    ×