என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ram nath Kovind"
- பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
- உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும்.
புதுடெல்லி:
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது.
அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்து இருந்தது. இதை அமல்படுத்த எந்த காலக்கெடுவையும் குழு நிர்ணயிக்கவில்லை.
இதை அமல்படுத்த ஒரு செயலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்து இருந்தது.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மோடி யின் 3-வது ஆட்சி காலம் முடிவதற்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
2029-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் தனியாக பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
- ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்று தெரிவித்தார்.
பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்துக்களால் இணையத்தில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். அவர் செய்யும் சிறு தவறுகளைக் கூட நெட்டிஸன்கள் உன்னிப்பாக கவனித்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குறித்த தவறான தகவல்களை வழங்கி மீண்டும் டிராலுக்கு ஆளாகியுள்ளார் கங்கனா.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை காலகட்டத்தில் நடத்த சம்பவங்களை மையமாக வைத்து கங்கனா இயக்கியுள்ள எமர்ஜென்சி படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த படத்திற்கான புரமோஷனில் தீவிரம் காட்டி வரும் கங்கனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடந்து வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளிக்கும்போது நிலைமை இப்போது நிறைய மாறியுள்ளது, தலித்துகள் ஜனாதிபதியாக ஆகியுள்ளார் என்றும் ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் தலித் ஜானதிபதி கே.ஆர்.நாராயணன் என்று பேட்டியெடுப்பவர் கங்கானாவை திருத்தினார். மேலும் ராம் நாத் கோவிந்தை ராம்நாத் கோவிட் என்றும் கங்கானா அந்த பேட்டியில் உளறிக்கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
??? "Sorry for my Misinformation" Kangana pic.twitter.com/ufDSirrDl4
— Mohammed Zubair (@zoo_bear) August 29, 2024
अब ऐसा लगने लग गया कि विपक्ष को ज्यादा मेहनत करने की जरूरत नहीं है जब तक सत्ता पक्ष में आपके जैसे नए-नए लांचर नेता आ गए हैं !! pic.twitter.com/E0nhPictkn
— अवधेश पाकड़?? (@AvPakad) August 30, 2024
- திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
- கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.
இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.
அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.
இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.
திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.
திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு.
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்.
பாராளுமன்ற மக்களவை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசலீத்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களிடம் இந்த குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.
இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். எனவே மூன்று முறை மட்டுமே அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்" எனக் கூறினார்.
- பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
- சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.
இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடயுமா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
- இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம் நாத் கோவிந்த் எட்டு பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே. சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குழு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
- ராம்நாத் கோவிந்த் இறுதிக்காலம் வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசிக்கலாம்.
- அவருக்கு மாதம் ரூ.2½ லட்சம் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
புதுடெல்லி :
புதிய ஜனாதிபதியாக நேற்று திரவுபதி முர்மு பதவி ஏற்றதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புதிய பங்களாவுக்கு புறப்பட்டார்.
டெல்லி ஜன்பத் சாலை 12-ம் எண் முகவரியில் உள்ள பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நீண்ட காலமாக குடியிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய மகன் சிராக் பஸ்வான் எம்.பி. குடியிருந்தார்.
மத்திய அரசின் நோட்டீசை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வீட்டை காலி செய்தார். பின்னர், ராம்நாத் கோவிந்த் ஓய்வுக்கு பிறகு தங்குவதற்காக வீடு தயார் செய்யப்பட்டது.
அந்த பங்களாவுக்கு ராம்நாத் கோவிந்த் காரில் சென்றார். மரபுப்படி, புதிய ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவருடன் சென்றார்.
பங்களாவில், மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர். அதுதொடர்பான புகைப்படத்தை கிரண் ரிஜிஜு, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.,
ஜனாதிபதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சட்டப்படி, ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும். மாத ஊதியத்தில் 50 சதவீதம், அதாவது ரூ.2½ லட்சம் அவருக்கு மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.
தனது இறுதிக்காலம்வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்கலாம். அவருக்கு ஒரு தனி செயலாளர், ஒரு கூடுதல் தனி செயலாளர், ஒரு தனி உதவியாளர், 2 பியூன்கள் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள். அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
இலவச மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும். விமானம், ரெயில், கப்பல் ஆகியவற்றில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம். 2 தொலைபேசிகள் (அகண்ட அலைவரிசை இணைப்புக்காக ஒன்று உள்பட), தேசிய ரோமிங் வசதியுடன் செல்போன், ஒரு கார் அல்லது கார் வைத்துக்கொள்வதற்கான படிகள் ஆகியவை வழங்கப்படும்.
ஒருவேளை, அவர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஓய்வுபெற்ற துணை ஜனாதிபதிக்கான சலுகைகள் எதுவும் அளிக்கப்படாது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் வாழ்க்கை துணைக்கும் நிறைய சலுகைகள் உண்டு. அவருக்கு டெல்லியில், வாடகை இன்றி பங்களா ஒதுக்கப்படும். அதற்கான பராமரிப்பு செலவும் அளிக்கப்படும்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி பெற்றதில் 50 சதவீத தொகை, அவருக்கு மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். இறுதிக்காலம்வரை மருத்துவ சிகிச்சை உண்டு. தனி செயலாளர், பியூன் ஆகியோருடன் அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்வரை கிடைக்கும்.
ஒரு இலவச தொலைபேசி, கார் ஆகியவையும், ஒரு நபரை துணைக்கு வைத்துக்கொண்டு, ஆண்டுக்கு 12 தடவை இந்தியாவில் உயர்வகுப்பு பயணமும் செய்யலாம்.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.
புதுடெல்லி:
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் நாளை வெளியேறுகிறார்.
இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாளை இரவு 7.00 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.
- இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர்.
- மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
ஜனநாயகத்தின் கோயிலாக பாராளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.
கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாகக் கையாண்டது.
மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.
திரவுபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் என தெரிவித்தார்.
- திரவுபதி முர்மு, வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, உள்ளிட்டோர் பங்கேற்பு.
- பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்துடன் பங்கேற்றார். மேலும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.
- உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.
- நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்து உள்ளது.
டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா. இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது. பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்