search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratha Yatra"

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
    • 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.

    மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர்.

    இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

    அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ.

    தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்.

    • 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (16-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான திரு.பிரேம் பங்கேற்று பேசுகையில்:

    "கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம் ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன.

    ரதம் பயணிக்கின்ற ஊர்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது.


    அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது.
    • ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் இருந்து ராமர், சீதை சிலையுடன் கிளம்பிய இந்த பக்தர் தரிசன வாகனம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்தது.

    அப்போது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடத்தை சேர்ந்த சத்குருக்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ராம ரத யாத்திரைக்கு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் ராமர் சீதைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ராமர் சீதையை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து ரதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ராம ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி சந்தான மகரிஷி சுவாமிகள் கூறுகையில், ராமர் ரத யாத்திரை வாகனம் அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் தொடங்கி பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஒடிசா, வெஸ்ட் பெங்கால், ஜார்கண்ட் உட்பட 27 மாநிலங்களுக்கு சென்று ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் டிசம்பர் 3-ந் தேதி அயோத்தி சென்றடைகிறது. இந்த வாகனம் 60 நாட்களில் இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறது என்றார். 

    • அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
    • தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அஜீத் சைதன்யா, திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகளாா், செஞ்சேரிமலை சுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகளாவிய ஆன்மிக கூட்டமைப்பு பொறுப்பாளா் கோவை சாய் சுரேஷ், உலகளாவிய ஓம் நவசிவாய அறக்கட்டளை பொறுப்பாளா் சிவ வெற்றிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

    இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-

    நொய்யல் நதியை புனிதப்படுத்தும் விதமாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2023 மே, ஜூன் மாதத்தில் ரத யாத்திரை நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, முக்கிய நிகழ்ச்சியாக 2023 ஆகஸ்ட் 25 முதல் 31ந்தேதி வரை 7 நாட்கள் பேரூா் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கங்கள், ஆன்மிக கண்காட்சிகள் நடத்துவது, நொய்யல் மறுசீரமைப்பு பவுன்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி தொழில் துறையினா், கல்வித் துறையினா், தொண்டு நிறுவனத்தினா், சமூக அமைப்பினா் உள்ளிட்டோரை ஒருங்கிணைந்து 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள நொய்யல் நதியை புனிதப்படுத்தும் பணியை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் ஒருங்கிணைப்புக்கு 9940737262, 9943433880 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:-

    காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் கழிவுகள் கலந்தாலும், அந்த நீரை தொட்டு பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், நொய்யல் ஆறு அத்தகைய நிலையில் இல்லை. மாசுபட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 'நொய்யல் பெருவிழா' நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு ஜூலையில் நொய்யல் நதிக்கரையோரம் யாத்திரையும், ஆகஸ்டு 25ல் இருந்து, 7 நாட்களுக்கு, 'நொய்யல் பெருவிழா'வும் நடத்தப்படும்.

    இதில் துறவியர் மாநாடு, சைவ, வைணவ மாநாடு, மகளிர் மாநாடு, சித்தர்கள் மாநாடு, பசு பாதுகாப்பு, நில மற்றும் நீர் மேலாண்மை, முத்தமிழ் கருத்தரங்கம் என ஆன்மிக, சுற்றுச்சூழல் மாநாடு, கருத்தரங்கு, கண்காட்சி ஆகியன இடம்பெறும். தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.

    நொய்யல் பாதுகாப்பு என்பது வெறும் விழாவாக முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், நொய்யல் நதி பயணிக்கும், 150 கி.மீ.,க்கு அதிகமான நீர்வழித்தடங்கள், நல்லாறு, கவுசிகா போன்ற ஏராளமான கிளை நதிகள், இடையிடையே உள்ள குளம், குட்டைகளை சுத்தப்படுத்தி, அதில் கழிவுகள் தேங்காதவாறு மாற்ற வேண்டும்.

    அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஊர்வலங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை குறித்த விளக்க வாகன கண்காட்சி மற்றும் ரதயாத்திரை தொடங்கியது. வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த ரதயாத்திரையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும்அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி,, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×