என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rats"
- பிரசாதத்தை சுத்தமாக வழங்க கோவில் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
- லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
மும்பை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டு இருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதையும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதையும் காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பதி கோவில் பரபரப்பு அடங்குவதற்குள் சித்தி விநாயகர் கோவில் லட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலிக்குட்டிகளை போட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
சமூகவலைதள வீடியோ குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சதாசர்வன்கர் கூறியதாவது:-
கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான லட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. லட்டு தயாரிக்கும் இடம் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது அல்ல. வெளியில் எங்கோ அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும். மேலும் இந்த விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரசாதத்தை சுத்தமாக வழங்க கோவில் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. லட்டு தயாரிக்க பயன்படும் நெய், முந்திரி உள்ளிட்டவை மும்பை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும். பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் சுத்தமாக கொடுப்பதை உறுதி செய்ய நாங்கள் முழுகவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது.
- மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது. இங்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் பொதுநல வைத்தியம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரிவிற்கு கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து பரிசோதனை செய்தும், பிரசவம் பார்த்தும் செல்கின்றனர்.
தற்போது கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் தெரு நாய்கள் மற்றும் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பகுதிகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் ஆஸ்பத்திரி வெளியே சாப்பிட்டு விட்டு சாக்கடையில் போடும் உணவு கழிவுகளுக்கு சாப்பிட எலிகள் வருகின்றனர். உணவு பற்றாக்குறை ஏற்படும்போது எலிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு வைத்திருக்கும் நோயாளிகளின் உணவுகளை பதம் பார்க்கின்றது.மேலும் அரசு மருத்துவமனை வளாகம் மரங்களால் சூழப்பட்டு இருப்பதால் தெருநாய்கள் அங்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது நோயாளிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 18-ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்