என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RDO"
- தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
- அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation
- செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
- ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென சுப்பிரமணியம் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் செந்தூர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள சிவசுப்பிர மணியபுரம் பகுதியில் போலியாக பட்டா மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரமேஷ், முருகன் மற்றும் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் உள்ளிட்டோர் செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கூறி மாவட்ட வருவாய் அலுவல ருக்கு புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் தென்காசி ஆர்.டி.ஓ. கெங்காதேவி மற்றும் வருவாய் அலுவலர் நேரில் விசாரணை மேற்கொள் வதற்காக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவல கத்திற்கு வந்திருந்தனர். அப்போது நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவராக இருந்து வரும் பொடியனூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் என்பவர் ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அங்கு அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக பேசியதோடு, சமூக ஆர்வலர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனை கண்டித்த ஆர்.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் ஆகியோர் சுப்பிரமணியனை வெளி யேற்றினர்.
தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர் செந்தூர் பாண்டியனுடன் சேர்ந்து நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொ ள்ளப்படும் என ஆர்.டி.ஓ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐஸ்வர்யாவும், பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரைண்ட் நகர் 13-வது நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (வயது47).
இளம்பெண் தற்கொலை
இவர்களது மூத்தமகள் ஐஸ்வர்யா (22). இவரும் பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சண்முகசுந்தரம் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் இவர்கள் 3 சென்ட் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்யா (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் பிரைண்ட்நகர் 13-வது தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல சாந்தி உப்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வெறுப்படைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த துக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். வேலை முடிந்து சாந்தி வீட்டிற்கு வந்த போது, ஐஸ்வர்யா தூக்கிட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சஞ்சிவ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
- 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
- இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.
உடுமலை :
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.
- நூறு வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்களை கவுரவித்து தேர்தல் ஆணைய சான்று வழங்கப்பட்டது.
- அதிகாரிகள் அனைவருக்கும் பாண்டியன் தான் எழுதிய புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்திரவின் படி 80 வயதிற்கு மேல் நூறு வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்களை கவுரவித்து தேர்தல் ஆணைய சான்று வழங்கப்பட்டது.
இதன் ஒரு நிகழ்வக சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி, தாசில்தார் பாபு, தேர்தல் துணை தாசில்தார் ரவிகணேஷ், தேர்தல் உதவி அலுவலர் சுந்தர், களப்பாகுளம் கிராம உதவியாளர் தமீம் அன்சாரி ஆகியோர் மூத்த குடிமக்கள் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக வருகை தந்து சால்வை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்தனர்.
என்.ஜி.ஓ. காலனி இந்திரா தெரு 85 வயதான பிச்சம்மாள் ஆவுடையப்பன் மற்றும் திருவள்ளுவர் தெரு 81 வயதான கோமதி கல்யாண சுந்தரம் ஆகியோர்களுக்கும் ஆர்.டி.ஓ. சால்வை அணிவித்து கவுரவித்தார். சேக்கிழார் தெரு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் 83 வயதான பாண்டியனுக்கு தாசில்தார் பாபு சால்வை அணிவித்து கவுரவித்தார். தனது வீட்டிற்கு நேரடியாக வருகை தந்த அதிகாரிகள் அனைவருக்கும் பாண்டியன் தான் எழுதிய உடல் ஆரோக்கியம் குறித்த புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
சந்திப்புகள் எளிதாக அமைந்திட அனைத்து வீடுகளுக்கும் அழைத்து சென்று மூத்த குடிமக்களை அதிகாரிகளுக்கு வார்டு கவுன்சிலர் ஜலாலுதீன் அறிமுகம் செய்தார்.
- சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
- சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும்.
உடுமலை :
உடுமலை விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் உடுமலை ஆர்டிஓ. தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி .,தேன்மொழிவேல், ஆர்டிஓ. வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி. ஏ. பி. பொறியாளர், மின்வாரிய பொறியாளர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், இந்து முன்னணி, இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட என்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ. ஜஸ்வந்த்கண்ணன் பேசியதாவது:-
விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை அமைப்பதற்கு அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஆர்டிஓ. விடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசு படுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டு இருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக் கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள் ,கல்வி நிலையங்கள் ,மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது .சிலைகளை வைக்கும் அமைப்பினர் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கு ஏற்கும் சிலைகள் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் வழியாக எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.
ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு அல்லது மற்றவர்களது மனம் புண்படியோ கோஷம் இடக்கூடாது. கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை நான்கு சக்கர வாகனங்களான மினி வேன், டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது என ஆர்டிஓ. கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்