என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "reconstruction"
- நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
- விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.
இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
- இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
வெளிர் மஞ்சள் நிறம்
அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு தற்போது புதிதாக வர உள்ள இந்த பஸ்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் இயக்கத்திற்கு வர உள்ள இந்த பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப் பட்டு வருகிறது.
இந்த பஸ்கள் சென்ைன, பெங்களூர், கரூரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எட்டு கோட்டங்க ளிலும் 500 பஸ்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் சேலம் சரகத்தில் மட்டும் 100 பழைய டவுன் பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.
நவீன முறையில் வடிவமைப்பு
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் 1047 பஸ்களும், தருமபுரி கோட்டத்தில் 853 பஸ்கள் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தினசரி சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள்.
பழைய பஸ்கள் தற்போ துள்ள பயணிகள் ரச ணைக்கு ஏற்ப நவீன முறை யில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப் பட்ட பஸ்களுக்கு கீழ் பகுதியில் வெளிர் கிரே கலரிலும், மேல் பகுதியில் நீல நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
பைபர் சீட்
தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களில் இருக்கை கள் இரும்பு ரெக்சினால் உள்ளது . புனரமைக்கப்பட்ட டவுன் பஸ்களில் பைபர் சீட் அைமக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, கும்பகோ ணம் , திருநெல்வேலி கோட்ட டவுன் பஸ்களில் பைபர் இருக்கைகள் உள்ளன.
சேலத்தில் பைபர் சீட் அமைப்பது இதுவே முதல் முறை. இந்த பஸ்கள் விரை வில் மக்கள் பயன்பட்டுக்கு வரும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது.
- விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின், உப கோவிலாக, கிழக்கு ரத வீதியில் காசி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து 29 ஆண்டு ஆகி விட்டது. இதனால்கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.
அதற்காக கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவ மூர்த்திக்கு பாலாலயம் செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது.கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
- தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம்.
- நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படும்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள நூறு வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த மண்டபங்களை புணரமைக்க தமிழக அரசு கடந்த 2022-23ம் ஆண்டு தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி ஒரு கோடியே நாற்பது லட்சம் நாகூர் தர்கா பெயரிலேயே கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட காசோலை வழங்கியது.
இந்த மராமத்து பணி துவங்குவதற்கான டெண்டர் விடும் பணி முறைப்படி வரும் வாரங்களில் துவங்க இருக்கிறது. புதுப்பிக்கப்பட இருக்கின்ற மண்டங்களை நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ நாகூர் தர்காவிற்கு ேநரில் சென்று கள ஆய்வு செய்தார்.
நாகூர் தர்காவினுள்உள் உள்ள எல் கருங்கல் மண்டபம், சிறிய மையாத்தாகொல்லை மண்டபம், கால்மாட்டு வாசல் வாலை மண்டபம், கிழக்கு வாசல் இடப்புற மண்டபம், வலப்புற மண்டபம் ஆகிய மண்டபங்களை பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர் உடன் நாகூர் தர்கா பிரசிடன்ட் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், பெருமராமத்து கணக்கர் ராஜேந்திரன், தர்கா அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஷாநாவஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
நாகூர் தர்காவுக்கு அரசு மராமத்து பெரு மானியம் பெறப்பட்டது. தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம். மேலும் நாகூர் தர்கா மார்கெட் பார்க்கிங் வசதியுடன் புணரமைப்பது, நாகூர் தர்கா சார்பாக கல்வி கூடங்கள் உருவாக்குவது, நாகூர் தர்கா சார்பாக மருத்துவமனை, சமத்துவ கூடம், நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற தர்கா நிர்வாகத்தில் உள்ள அனைத்து திட்டங்களையும் படிபடிப்யாக அரசு மற்றும் தனியார் உதவியுடன் நிறைவேற்றி தர முழு முயற்சி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோழர் கால பாசி அம்மன் கோவில் புனரமைப்பு தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.
- மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில வழக்கறிஞர் அணி செய லாளர் கலந்தார் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசிபட்டினம் கி.பி. 875 முதல் கி.பி. 1090 வரையில் துறைமுகமாக இருந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் இருந்துள்ளது.
இங்கு சோழர்களின் வெற்றியின் அடையாளமாக 8 கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசி அம்மன் சிலை இருந்துள்ளது. இந்தநிலையில் இந்த கோவில் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதில மடைந்து காணப்படுகிறது. எனவே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபாடு செய்வதற்கு புனரமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோ ரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.
இந்த கோவில் கட்டுமானங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கோவிலை புனரமைப்பு செய்வதற்கு தொல்லியல் வல்லுநர்களிடம் ஆலோ சனை பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
- மாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது.
- ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது.
இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, ரூ.10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்ப குதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலை யில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்ந டைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.
- ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
- மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.
ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.
நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.
மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.
ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.
இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.
நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.
- முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி
- சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி ரூ.26 லட்சத்தில் புனரமைப்பு பணியை சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.
முதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்கவும், விளையாட்டுத்திடலை மேம்படுத்துவதற்கு ரூ. 26.70 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜையில் சம்பத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப்பணித்துறையின் சிறப்பு கட்டிடம் கோட்டம்-2 செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கோபிநாத், பள்ளி முதல்வர் எழில்கல்பனா மற்றும் ஆசிரியர்கள் கட்டிட ஒப்பந்ததாரர் கெங்காதரன், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு கரூர் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத வாடகையாக செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே தெரியும் படி இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு கருதி 30-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலிசெய்துவிட்டனர். காலி செய்யப்பட்ட கட்டிடங்களில் பழைய மரசாமான்கள் உள்ளிட்டவைகளை போட்டு வைக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் விளையாடுவதற்காக அமைக்கபட்ட பூங்காவில் வேண்டாத செடிகள் முளைத்து பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கிருந்து விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தாந்தோன்றிமலையில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அங்குள்ள பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்