search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduction"

    • பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

    • 10 அரசு பஸ்களில் உடனடியாக அமலுக்கு வந்தது
    • விரைவு பஸ்களில் செய்வோர் ரூ.64 செலுத்த வேண்டும்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை போக்குவரத்துக் கழக கிளையில் சுமார் 36 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேலம், திருப்பூர், கோவை, பழனி, பொள்ளாச்சி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் கட்டணமாக ரூ.64 வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்ப டும் நிலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வால் பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 10 பஸ்கள் கடந்த 24-ந் தேதி முதல் சாதரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டன.

    இந்த பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து, பயணக் கட்டணமாக ரூ.64க்கு பதிலாக ரூ.48 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவு பஸ்களில் பயணம் செய்வோர் கட்டணமாக ரூ.64 செலுத்த வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி 170 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.95 அடியாக குறைந்துள்ளது.

    மேலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் அணைக்கு 32 கன அடி நீரே வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் தேனி மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு வறண்டு காணப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 45.12 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி மேட்டூர் அணைக்கு 1970 கனஅடி தண்ணீர் வந்தது.

    பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 479 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 603 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

    இந்த நிலையில் தண்ணீர் திறப்பு நேற்றிரவு முதல் 500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 32.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 32.8 அடியாக சரிந்தது.

    விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.#edappadipalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  துணை  பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

    எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும்.

    தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



    தற்போது கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் விலையில் உள்ள இந்தச் சூழலில், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றிக்கு 100 டாலர் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அப்போது பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.#Edappadipalanisamy #TTVDinakaran
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,306 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,227 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 33.69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 33.52 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ×