என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "refugee"
- 2021-க்கும் முன்னதாக 4 ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்தனர்.
- 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.
சமீப ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் அதிகமானோர் வரத் தொடங்கினர். 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் 2022-ம் ஆண்டு 45774 பேராக அது உயர்ந்தது.
இதை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
- ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது.
- சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.
கொழும்பு :
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.
தற்போது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.
இதற்கிடையே, போர் முடிந்து விட்டதால், இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்தது.
அதை ஏற்று இலங்கை அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயகே தலைமையில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், இலங்கை தமிழர்களை அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தமிழர்களை அழைத்து வந்து இலங்கையில் மீண்டும் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஒரு குழுவை இலங்கை அரசு நேற்று அமைத்தது.
அதிபரின் கூடுதல் செயலாளர் சண்டிமா விக்ரமசிங்கே தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றப்பிரிவு உயர் அதிகாரி, வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி, பதிவாளர் ஜெனரல் துறையின் உயர் அதிகாரி, நீதித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று இலங்கை அரசின் இணையதளம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களில் 3 ஆயிரத்து 800 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- மண்டபம் முகாமை சேர்ந்த இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.
- வேலைக்கு செல்லாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
இலங்கையை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் நிரோஜன் (வயது22). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டு திரிந்துள்ளார்.
இதனை இவரது தாய் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த நிரோஜன் வீட்டிலிருந்த எலி பேஸ்டை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு பின்புறம் படுத்துக்கொண்டார். இதனை பார்த்த அவரது நண்பர்கள், நிரோஜனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு மண்டபம் கேம்ப் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிரோஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.
ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர்.
இந்த நிலையை ஒழிக்கும் முயற்சியில் தற்போது பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது. பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிரதமர் இம்ரான் கான், அகதிகள் எவ்வித அடையாளங்களும் இல்லாததால் வேலை வாய்ப்புகள் இன்றி அவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் நடைபெறும் பல்வேறு குற்றங்களை தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் 2.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #AfghanRefugee
இலங்கையின் முன்னாள் அதிபர் பண்டாரநாயகே மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து பல தமிழர்கள் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறின. இவர்களுக்கான வாழ்வாதாரமாக இரண்டு ஹெக்டேர் நிலம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1976-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழர்கள் குடும்பத்துக்கு வெறும் அரை ஹெக்டேர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.
இவர்களுக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த குடும்பங்கள் இங்கு வந்து குடியேறி 42 ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த விவாகரத்தை தற்போது கையில் எடுத்துள்ள அந்தமான் - நிக்கோபார் தீவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே, தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #1.5hectors #TamilSettlers #SriLankaTamils #AndamanTamilSettlers
மியான்மர் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது அங்கிருந்து வெளிவந்த ரோஹிங்கியா இன மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் ஐதராபாத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை போன்ற அடையாள அட்டைகளை பெற்ற ஒரு பெண் உட்பட 3 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் போலி ஆவணங்களை பெற்று அடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதான ரோஹிங்கியாக்கள், அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RohingyaRefugees
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்