என் மலர்
நீங்கள் தேடியது "refugees"
- சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
- அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்
கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை நேற்று [சனிக்கிழமை] தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர். அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
- கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
- நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.
பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

- இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.
ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை அகதிகள் முகாமில் 2 பேருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
- இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ரூபன்(37). இவரது அண்ணன் மிஸ்ரோய்(42). ரூபன் மனைவி செல்வி. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் செல்வியின் சித்தப்பா மகன் தமிழ்ச்செல்வன் தன்னுடைய அக்காவை பிரிந்து வாழ்வதால் ரூபனிடம் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று ரூபன் இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வன் குடிபோதையில் தகராறு செய்து ரூபனை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்.
தடுக்க வந்த அண்ணன் மிஸ்ரோயையும் பாட்டிலால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே ஓடிவிட்டார். காயம் அடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
- ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கான வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர்ஊராட்சியில்முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புகள் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கெனஅரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவனங்களின்
பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இந்த குழுவில்உறுப்பினராக உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர்ஊராட்சியில் 236 குடும்பங்களுக்கு புதிதாக ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் கட்டித்தர தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இன்றையதினம் முகாம் வாழ் தமிழர்களுக்கானகுடியிருப்புக்கள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மானா–மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்திரன், ஊரக வளர்ச்சி
துறை செயற்பொறி யாளர் சிவராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சாந்தாசகாயராணி, ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமாஅருணாசலம், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொழும்பு:
இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், பயங்கரவாதிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் முஸ்லிம்களை தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இலங்கையில் நிகொம்பாவில் செயின்ட் செபாஸ்டின் தேவாலயம் உள்ளது. இங்கும் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களுடைய உடல் அடக்கம் ஒரே இடத்தில் நடந்தது.
நிகொம்பாவின் புறநகர் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் 400 குடும்பத்தினர் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுவதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நிகொம்பாவில் இறந்தவர்கள் அடக்கம் முடிந்ததும் 100-க்கும் மேற்பட்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்த பகுதிக்கு வந்தனர்.
இதனால் பயந்துபோன அவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தனர். அப்போது ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஆண்களை இழுத்து வந்து தாக்கினார்கள். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த தாக்குதல் நடந்தது.
இதற்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி நிகொம்பா போலீஸ் நிலையத்திற்கு ஓடினார்கள். போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதன் பிறகு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் அமைதி திரும்பியது.
ஆனாலும் உயிருக்கு பயந்து 60-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நிகொம்பா போலீஸ் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இது சம்பந்தமாக மனித உரிமை கமிஷன் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைவர் நவாஸ்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் முஸ்லிம்கள் வெளியே வர பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அங்கு தாக்குதல் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #srilankablasts #Pakistanrefugees