search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reliance"

    • முன்னணி இந்திய நன்கொடையாளராக ஷிவ் நாடார் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
    • ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    நாள் ஒன்றுக்கு அவர் சராசரியாக ரூ.5.7 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நன்கொடையாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் CSR நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ. 228 கோடி நன்கொடையுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

    இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், நந்தன் நிலேகனியின் மனைவியுமான ரோகினி நிலேகனி, ஆண்டுக்கு 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் அதிக நன்கொடைகள் அளித்த பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    • ஜியோசினிமா - டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

    அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இடையேயான 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பிற்கு இந்திய போட்டி ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையும், டிஸ்னி நிறுவனத்திடம் ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் உள்ளது. இந்நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் மொத்த கிரிக்கெட் உரிமையும் இந்த கூட்டணிக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

    இதன் காரணத்தால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டித்தன்மை முற்றிலுமாக குறைந்து மோனோபோலி நிலை உருவாகும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய போட்டி ஆணையம் தனது கருத்தை 2 நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.

    இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மீது ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணங்களை கூறுமாறு அந்நிறுவனங்களிடம் இந்திய போட்டி ஆணையம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த புதிய நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஆகிய இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பினால் உருவாகும் புதிய நிறுவனம் சோனி, ஜீ என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் 120 தொலைக்காட்சி சேனல்களும் மற்றும் இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
    • ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்க திட்டம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விளைவாக மூத்த பங்குதாரராக ஆவதற்கு ஒரு லாபகரமான பேரம் நடத்தி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான லீடர்போர்டில் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தியுள்ளது.

    ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், வயாகாம் நிறுவனத்தின் ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஸ்டார் இந்தியா உடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து ரூ. 70,352 கோடி மதிப்புள்ள இந்த கூட்டு முயற்சியில், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அதன் வளர்ச்சி ஆதரிக்க முயற்சியில் ரூ.11,500 கோடி செலுத்தும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பிற்குப் பிறகு ஜியோ சினிமாவை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்கவும், யூடியூப், நெட்ப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களுக்கு வலுவான போட்டியை அளிக்கவும் உதவும் என்பதால் இந்த நடவடிக்கை சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

    • ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
    • இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்

    பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

    தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.

    மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.

    டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது.
    • 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு வங்காள மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலை புதுப்பிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை எடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டமைப்புகள் உள்பட முழு கோவில் வளாகத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • முகேஷ் அம்பானிக்கு இ.மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் வந்தது.
    • அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்காவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சில தினங்களுக்கு முன் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை போலீசாரும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தொடர்ந்து 5 முறை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    • முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
    • தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. வெள்ளிக்கிழமை மிரட்டிய அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    நேற்று 2-வது தடவை அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இ.மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மும்பை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    அந்த மிரட்டலை விடுத்த பீகாரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த தடவை அம்பானியை மிரட்டியது யார்? என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் எங்களிடம் சிறந்த துப்பாக்கி சுடும் நபர் உள்ளனர்
    • பணம் தராவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என இ-மெயில் மூலம் மிரட்டல்

    ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.

    அதில் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்காவிடில் உங்களை கொலை செய்வோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

    • ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.

    ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.

     

    ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

    ஜியோபுக் அம்சங்கள்:

    11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே

    மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்

    4 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஜியோ ஒஎஸ்

    2MP HD வெப் கேமரா

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    இன்பினிட்டி கீபோர்டு

    ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை

    I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்

    ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்

    4000 எம்ஏஹெச் பேட்டரி

    8 மணி நேரத்திற்கு பேக்கப்

    இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.

    ரபேல் பேரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகி விட்டது என காங். தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். #RafaleDeal #Reliance #Modi #Congress
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரி தள்ளுபடி வழங்கியதாக பத்திரிகை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    அந்தக் கட்சியின் தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “இந்த பேரத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறினார்.

    மேலும் அவர், “இதே போன்று எத்தனை பிற நிறுவனங்கள் வரி தள்ளுபடி பெற்றன?” என கேள்வி எழுப்பியதுடன், “ காவலாளி திருடனாகி விட்டார் என்பது இதன்மூலம் தெளிவாகி இருக்கிறது. மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டார்.  #RafaleDeal #Reliance #Modi #Congress
    பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுவரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி வரியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்துள்ளது என அந்நாட்டு பத்திரிகை லி மாண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. #France #AnilAmbani #TaxSettlement
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.

    இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.

    உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RafaleDeal #Reliance #RahulGandhi

    ×