search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repo Rate"

    • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு.
    • 9வது முறைாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று இந்த கூட்டம் முடவடியை உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5% ஆக தொடரும். 9 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

    பெரும்பான்மை கருதி, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. அமெரிக்க பொருளாதாக சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
    • 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.

    2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

    3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

    4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.

    5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.

    6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.

    7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.

    9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.

    10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

    11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி

    13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்

    14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.

    15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.

    • ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும்.
    • 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. பின்னர் கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெப்போ வட்டி விகிதம் 6-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீடு, வாகனம். மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை.

    • தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது
    • உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும்

    இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம்.

    இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.

    ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது.

    சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    இதனை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

    விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.

    உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

    முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த பிப்ரவரியில், அதற்கு முன்பு வரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    அந்நிய செலாவணி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சியானது 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 6 சதவீதம், நான்காம் காலாண்டில் 5.7 சதவீதம் என ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.

    சில்லறை பணவீக்கமானது, முன்பு மதிப்பிடப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2024 நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
    • கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது.

    ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

    மேலும், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

    கடந்த மாதம்தான் ரெப்போ வட்டி விகிதம் 0.50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறி உள்ளன. கிராமப்புற தேவைகள் கவலையான போக்கை காட்டுகிறது.
    • அரசியல் அபாயங்கள் போன்ற உலகளவில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சரிவை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனான ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன மற்றும் தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்கின்றன.

    மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்கும் போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்களில் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் அதிகரிக்கும்.

    பண வீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

    பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு குறித்து சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரெப்போ வட்டி விகிதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பண வீக்கம் அதிகமாக உள்ளது. பண வீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச நாணய நிதியம், பொருளாதார வளர்ச்சியின் கீழ்நோக்கிய கணிப்பை திருத்தியுள்ளது. மேலும் மந்தநிலை அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    இந்திய பொருளாதாரம், உயர் பண வீக்கத்தில் சிக்கி தவித்து வருகிறது. பல நாடுகளில் அன்னிய செலாவணி குறைந்து உள்ளது. பண வீக்கம் மிகவும் அதிகரித்து இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வலுவான சூழலில் இருக்கிறது. போதிய அளவு அன்னிய செலாவணி, இருப்பு இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்தாலும் பிற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக உயர்ந்து இருக்கிறது.

    பிற நாடுகளில் இருக்கும் பண வீக்கம் இந்தியாவில் இல்லை.

    இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அன்னிய நேரடி முதலீடு 13.6 பில்லியன் டாலராக மேம்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 11.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உலகளவில் 4-வது பெரியதாக உள்ளது.

    உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறி உள்ளன. கிராமப்புற தேவைகள் கவலையான போக்கை காட்டுகிறது.

    அரசியல் அபாயங்கள் போன்ற உலகளவில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சரிவை எதிர்கொள்கிறது.

    வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.6.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.8 லட்சம் கோடியாக குறைந்து உள்ளது. ஆகஸ்டு 4-ந்தேதி (நேற்று) வரை ரூபாய் மதிப்பு 4.7 சதவீதம் சரிந்து உள்ளது.

    இதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் பண வீக்கத்தை காட்டிலும் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம்.

    நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி தனது பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவீதமாக தக்க வைத்து கொண்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மே மாதம், 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்படுதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 4.9 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    • இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனில் நடந்த போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    வங்கிகளுக்கு வழங்கிய கடன் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.



    எனவே, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 6.50 சதவீதமாகவும், வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 6.25 சதவீதமாகவும் இருந்தது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதையடுத்து வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜிடிபி) 7.4 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 3.2 முதல் 3.4 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும். இதன்மூலம் இரண்டு முறை அடுத்தடுத்து வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதேபோல் 2019ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7,4 ஆக இருக்கும் என்றும், 2019-20ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கம் 2.7-3.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடைசியாக நடந்த இரண்டு கூட்டங்களின் முடிவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. கடைசியாக ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது.



    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசித்தனர். தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடாது என நிதிக்கொள்கை குழுவின் 4 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு உறுப்பினர் 0.25 சதவீதம் உயர்த்த வேண்டும் என கூறினார். மற்றொரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும்.

    மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக அதிகரிக்கும். ஜிடிபி வளர்ச்சியானது 7.4 சதவீதம் என்ற நிலையில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    ×