search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reserve Bank"

    • LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
    • இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    • யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.
    • இதற்கு முன்பு செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.

    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

    யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யூபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    மேலும், வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலேயே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    தற்போது, செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    • விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடி அபராதம்.
    • யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.

    விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ (ICICI) வங்கிக்கு ₹1 கோடியும், யெஸ் (YES) வங்கிக்கு ₹91 லட்சமும் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

    ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பரமரிக்கவில்லை எனவும் யெஸ் வங்கி தனது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்கவில்லை எனவும் கூறி இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 13% வரை சரிவை கண்டுள்ளது.

    இதன்மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோடக் தனது சொத்து மதிப்பில் சுமார் 10,831 கோடி ரூபாயை இழந்துள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரிடம் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருந்தது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

    • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
    • ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது

    கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது.

    ஆகவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது.

    • வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    • பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக வர்த்தகம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    • சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
    • கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.

    மும்பை:

    வங்கிகளில் கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோரிடம் சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது, கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது, அடமானப் பத்திரத்தை ரத்து செய்வது ஆகியவற்றுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக காலம் எடுத்துக்கொள்வதாக புகாா்கள் தொடா்கின்றன.

    இந்நிலையில், இது தொடா்பாக ஆர்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளா் ஒருவா் கடனை முழுமையாக அடைத்த 30 நாட்களுக்குள் அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.

    இதைச் செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.

    மேலும், வாடிக்கையாளா் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவா் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும். இது தொடா்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.

    கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும்.

    எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்து போவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
    • இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.

    நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.

    அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.

    எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
    • வங்கி அதிகாரிகள் மீது சிலர் கோபம் கொண்டதை பார்க்க முடிந்தது.

    சென்னை :

    நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப்பெற இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. இது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள், 23-ந் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் அந்த நோட்டுகளை கொடுத்து அவற்றிற்கு வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

    அதோடு, ஒரு நேரத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில்2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, வேண்டுகோள் சீட்டோ தேவையில்லை. ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. அடையாள ஆவணம் தேவையில்லை என்ற அறிவிப்பை முன்னிட்டு, பணத்தை மாற்றிக்கொள்வதற்காக வங்கிக்கு வந்த சிலர் ஆவணங்களை கொண்டு வரவில்லை.

    ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளின்படி, கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெறலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியிருந்ததால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வருவோர் 6 அடையாள ஆவணங்களில் ஒன்றை வங்கி காசாளரிடம் காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

    வங்கிகள் குறிப்பிட்டுள்ள 6 விதமான அடையாள ஆவணங்கள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை ஆகும். ஆனால் கே.ஒய்.சி. பற்றிய விவரங்கள் தெரியாத மக்கள் சிலர், இதுபோன்ற அடையாள ஆவணங்களை வங்கிகளுக்கு நேற்று எடுத்து செல்லவில்லை.

    பணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றபோது, அவர்களின் அடையாள விவரங்களை கோரும் விண்ணப்பத்தை வங்கி காசாளர் கொடுத்தார். அந்த அடையாள ஆவணங்களை கொண்டு வராதவரால் நேற்று ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே இதுகுறித்த அறிவிப்பை ஏன் நோட்டீஸ் பலகையில் வெளியிடவில்லை? என்று வங்கி அதிகாரிகள் மீது சிலர் கோபம் கொண்டதை பார்க்க முடிந்தது.

    ரிசர்வ் வங்கி அறிவித்தது ஒன்று, ஆனால் வங்கிகளில் உள்ள நடைமுறை வேறு ஒன்றாக இருக்கிறது என்று அவர்கள் வருத்தத்துடன் சென்றனர். ஆனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்கள் ஏற்கனவே வங்கியிடம் இருக்கும் என்பதால் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் கோரப்படவில்லை.

    • கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
    • சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது.

    தாம்பரம்:

    சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் நோக்கி நேற்று 2 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தது.

    அந்த கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது. லாரியில் இருந்து புகை வந்ததால் டிரைவர் உடனடியாக நிறுத்திவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள சித்த ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 2 கன்டெய்னர் லாரிகளும் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் பணத்துடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரிகளுக்கு தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம், குரோம்பேட்டை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பழுது சரி செய்யப்படாததால் பழுதான கன்டெய்னர் லாரியை மட்டும் ராட்சத கிரேன் வாகனம் உதவியுடன் கட்டி இழுத்து மீண்டும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ரூ.535 கோடி பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது.
    • இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் பணத்தை ஏற்றிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டபோது தாம்பரம் அருகே ஒரு லாரி பழுதானது.

    இதனால் இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
    • அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.

    நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

    அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.

    அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×