என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "residents"
- இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
- இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு குடியேறுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திறன்மேம்பாடு கழகத்தில் பணி செய்து வரும் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
இந்த குடியிருப்பில் மொத்தம் 462 வீடுகள் உள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினர்.
மேலும் அந்த கடிதத்தில், ஹர்னி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிலோமீட்டருக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கூட இல்லை. இப்போது இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பெண் குடியேறுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
7 வருடமாக இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குடியிருப்புவாசிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குடியிருப்புவாசிகளின் தொடர் எதிர்பால் இஸ்லாமியப் பெண் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
- மேலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
- மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை, ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் மேலூர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் செல்ல காத்திருந்தனர். ஆனால் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிவகங்கை, ஏரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் கடும் அவதியடைந்தனர். பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் சுட்டெரிக்கும் வெயிலில் பலமணி நேரம் காத்திருந்தனர்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென பஸ்நிலையம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மேலூர் அரசு பஸ் டிப்போ அலு வலகத்திற்கு தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறயில் கைவிடப்பட்டது. மேலூரில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் சரியான நேரத்திற்கு வருவதில்லை.
முகூர்த்த காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. இதனால் பொது மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலையும் மாற வில்லை என பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர்.
- குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியில் 448 வீடுகளுடன்அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில்தெப்பக்குளம்போல தேங்கி நிற்பதால் குடியிருப்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் , இங்கு கழிவுநீர் வெளியேற எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அனைத்து வீடுகளின் கழிவுநீரும் பல மாதஙகளாக குடியிருப்புகளுக்கு மத்தியில் சேறும் சகதியுமாய் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் தேங்கி நிற்கும் சாக்கடை குழியின் ஆழம் தெரியாமல் அங்கு விளையாடுவதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக குடியிருப்பவர்கள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- மின் கணக்கீடு நடக்கவில்லை.
மங்கலம் :
மங்கலம் அருகேயுள்ள அக்ரஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்தில் சில கிராம மக்கள் ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமனூர் கோட்டம் அக்ஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், வேட்டுவபாளையம், மலைக்கோவில், உப்பிலிபாளையம் பகுதிகளில் தவிர்க்க இயலாத காரணத்தால் மின் கணக்கீடு நடக்கவில்லை.
இப்பகுதி மக்கள் ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே இம்மாத கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- தனிநபர் ஒருவர் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் ஆலடி ரோடு மற்றும் கடலூர் ரோடு ஸ்டேட் பேங்க் நிறுத்தம் அருகில் உள்ள இடங்களில் முல்லா ஏரி என்ற நீர்நிலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை உடனடி யாக அகற்றம் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் தனபதி தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு–களை அகற்றும் பணி தொடங்கியது.
தாசில்தார் தனபதி தலை–மையிலான வருவாய்த் துறையினர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி., எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவர் மற்றும் ஒரு வீட்டை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டு–களாக வசித்து வரும் வீட்டை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மற்றும் தாங்கள் உடனடியாக செல்ல போக்கிடம் இல்லை, கட்டிடங்களை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பணி தற்போது வீட்டில் இருக்கும் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்படியும் கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி தொடங்கும் போது தனிநபர் ஒருவர் கட்டிடங் களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யும்போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
- மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மலைவாழ் மக்களிடம், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு மலைவாழ் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு டவர் லைன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும் குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, மாவடப்பு உள்ளிட்ட அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர்.திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதியில் ஆய்வு செய்த போது 17வது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி, குடியிருப்பு தலைவர் கோபால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்