search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reunion"

    • அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
    • முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

    வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களும், அவர்களின் மாணவர்களும் சந்தித்து நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துறைமுக கல்விக் கழகநிர்வாகத்தின் கீழ் நடைபெற்றுவரும் துறைமுக மேல்நிலைப்பள்ளியில் 1997ம் ஆண்டு மேல்நிலை கல்வி பயின்ற மாணவ-மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வு, தூத்துக்குடி துறைமுக சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    பசுமை நிறைந்த நினைவுகளை மாணவ-மாணவிகள் பலரும் நினைவுகூர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர்கள் யூஜின் சகாயராஜ், ஹெக்டோ தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் உலக பிரகாஷ், சுப்புலட்சுமி வரவேற்றனர். ராமச்சந்திரன் பவானி தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் காந்திமதிநாதன், சுப்பம்மாள், சார்லஸ்ரத்தினராஜ், சரோஜா ஞானம், ராமலட்சுமி, அருண்குமார் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் ஆத்தியப்பன், விநாயகம், மஞ்சுளா, அன்னபாக்கியம், கிளாடிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் தனலட்சுமி, முன்னாள் மாணவர்கள் சக்திவேல், ராமலட்சுமி, வின்சென்ட், அம்மாள், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1989 - 1990 -ஆம் ஆண்டு பிளஸ் 2 கலைப்பிரிவு பயின்ற மாணவ மாணவிகள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு அப்போதைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அருண் மற்றும் பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினர். தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிப்பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பெரும்பாலனோர் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்குத் தேவையான 2 பேட்டரிகள் முன்னாள் மாணவர்கள் சார்பில், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை சங்கரசுப்பிரமணியன், முத்துராஜ், வழக்கறிஞர் செந்தில், சாகுல் ஹமீது, இசக்கிராஜா, பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×