search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice mills"

    • ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
    • காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்குளி:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குநர்அருண் உத்தரவின்பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர் திருப்பூர் ஊத்துகுளி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.அவர்களுடன் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரேசன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க மில் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். . முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் சம்மந்தபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தனர். 

    • அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
    • புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர கோடைகால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1, 250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில்களில் குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
    • விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? என கேட்டறிந்தனர்.

    தென்காசி:

    மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவின்பேரில் நெல்லை சரக குடிமை வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.எஸ்.பி. முத்துக்குமார், தென்காசி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள நெல் அரவை மில் மற்றும் புளியரை, கற்குடி, ஆகிய இடங்களில் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் குளறுபடிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன.
    • போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மீது மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இதே போல அரிசி விற்பனை கடைகள் 400-க்கும் மேற்பட்டவை பூட்டப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி விலை மட்டும் கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 5 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதை திரும்ப பெறக்கோரி இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அரிசி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 150 அரிசி ஆலைகள், 400 அரிசி கடைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன. ஒரு அரிசி ஆலையில் நாளொன்றுக்கு சராசரியாக 10 டன் அரிசி அரைக்க ப்படும். போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிசி ஆலை- கடைகள் இன்று மூடியதால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது.

    கடலூர்:

    பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது. இந்த வரி விதிப்பினால் அரிசி விலை கணிசமாக உயரும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரிசி ஆலை அதிபர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரிசி ஆலை அதிபர்கள், அரிசி கடை உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 250 அரிசி கடைகள், 30 அரிசி ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகள் மற்றும் கடைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மூடினர். அதன்பின்னர் கடைகள் முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை பரிசீலனை செய்ய கோரி பதாகைகள் வைத்திருந்தனர். இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது

    ×