என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "River flood"
- 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
- சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரிம்புழா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கூட்டி லக்கடவு என்ற பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது செர்புளச்சேரி குட்டிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ரிஸ்வானா(வயது19), கரக்குறிச்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகள் டிமா மெப்பா(20) என்ற 2 இளம்பெண்கள் மற்றும் பாதுஷா என்ற சிறுவன் ஆகிய 3 பேரும் ஆற்றில் மூழ்கினர்.
இதனை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதனையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும் மீட்டு வட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ரிஸ்வானா மற்றும் டிமா மெப்பா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். சிறுவன் பாதுஷா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆற்றில் குளித்த 2 இளம்பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் பணிகளை ஆய்வு செய்தார்.
- எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 25 ஆண்டுகளாக மழை காலங்களில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்று வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் சுமார் ரூ.50 லட்சம் செலவில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாதபடி தடுக்கும் வகையில் நீண்ட தடுப்புசுவர் அமைக்கும் பணிக்கு நிதி பெற்றுக்கொடுத்து தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தங்களின் நீண்ட 20 ஆண்டுகால கோரிக்கையை ஒரே ஆண்டில் நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,
- நல்லுக்கவுண்டர் (வயது 80). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு வந்தார்.
- வெள்ள நீரின் போக்கில் நீச்சல் அடித்துக் கொண்டே சென்ற முதியவர் ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை பிடித்து ஏறி விட்டார்.
திருச்சி :
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் நல்லுக்கவுண்டர் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு வந்தார். பின்னர் கிடைக்கும் வேலையை செய்து கடை வராண்டாவில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நேற்று இரவு யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரை யோரம் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். அடுத்த நொடி அவரை வெள்ளம் இழுத்துச் சென்று விட்டது. வெள்ள நீரின் போக்கில் நீச்சல் அடித்துக் கொண்டே சென்ற முதியவர் ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையை சமயோசிதமாக பிடித்து அதில் ஏறி விட்டார்.
பின்னர் கடும் குளிரில் நடுங்கியபடி தன்னை காப்பாற்றுமாறு சப்தம் எழுப்பினார். இதைப் பார்த்தவர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி, சக்திவேல் மூர்த்தி, சந்திரசேகர், மணிகண்டன் பிரபு உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி ரப்பர் படகில் சென்று முதியவரை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் நீச்சல் அடித்து சென்று மின் கோபுரத்தை பிடித்து தப்பிய முதியவரின் துணிச்சலை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். மேலும் அவருக்கு ஆயுசு நூறு என்று கூறி கலைந்து சென்றனர். தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையால் உயிர் பிழைத்த முதியவரை அனைவரும் பாராட்டினர்.
- முகேஷ் குமார் தனது புத்தகப்பை, யூனிபார்ம் ஆகியவற்றை கழட்டிவிட்டு காவிரி ஆற்றில் குளித்துள்ளார்.
- அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
திருச்சி :
திருச்சி ஜீவா நகரை சேர்ந்த சிட்டி என்பவரின் மகன் முகேஷ் குமார் (வயது 16). இவர் மரக்கடை பகுதியில் உள்ள சையது முதுர்ஷா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், தனியாக புறப்பட்ட அவர் திருச்சி சிந்தாமணி காவிரி படித்துறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது புத்தகப்பை, யூனிபார்ம் ஆகியவற்றை கழட்டிவிட்டு காவிரி ஆற்றில் குளித்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டும், காப்பாற்ற முயன்றும் எந்தவித பலனும் இல்லை. இதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு மீண்டும் இன்று காலை முதல் தொடங்கி தேடும் பணி நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாணவனை வெகு தூரத்துக்கு ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. பிளஸ்-2 மாணவன் ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியில் கடந்த ஜூலை 18-ந்தேதி மயங்கிய நிலையில் ஒருவர் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 24-ந்தேதி உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். கருப்பான தேகத்துடன் நெற்றியில் காயம் பட்ட தழும்பு மற்றும் இடது காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதற்கான தழும்புகள் உள்ளன. இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால், நீதிமன்ற காவல் நிலையத்தை நேரிலோ அல்லது காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்