என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Road Expansion Work"
- ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
- இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பசுவந்தனை-ஓசனூத்து-எஸ்.கைலாச புரம் வரையிலான சாலையை விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப் படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், உதவி பொறி யாளர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி, உதவி பொறியாளர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஊராட்சி செயலர் செல்வன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, தி.மு.க. தொண்டரணி கோபால், கிளை செயலாளர்கள் பாலமுருகன், நிறையபூபதி, சண்முகம், கிளை பிரதிநிதி, சமுத்திரவேல் மற்றும் நிர்வாகிகள் அழகுராஜ், கருப்பசாமி, சண்முகநாதன்,ஆட்டோ கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது.
- சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் ஊராட்சி சிறுவத்தூர் திடீர்குப்பம் சாலை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது. இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு, அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வீக சிகாமணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். என்ஜினியர் ஜெய்சங்கர், அரசு ஒப்பந்ததாரர் ராமதாஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ் ணன், அங்கு செட்டிபாளை யம் தி.மு.க. ஊராட்சி செய லாளர் சிற்றரசு, ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.