என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "roadshow"
- பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
- நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார்.
நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மாணவர்களிடம் பிரியங்கா காந்தி புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார்.
பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
#WATCH | Kerala: Congress leader and party's candidate for Wayanad Lok Sabha by-election, Priyanka Gandhi Vadra holds roadshow in Wayanad as part of her election campaign pic.twitter.com/iC0ZWK6bw7
— ANI (@ANI) October 28, 2024
- மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார்.
- வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 567261 வாக்குகள் பெற்று இருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
குமாரசாமி இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசியலிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இன்று மக்கள் தாமாக முன்வந்து என்னை அன்புடன் வரவேற்றனர். மக்கள்தான் எனது பலம். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்காகவும் பாடுபடுவேன். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.
- 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
- வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.
வாரணாசி:
பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.
நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.
அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.
அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.
அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
- 2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது.
- வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.
காந்திநகர்:
மத்திய மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் நாளை தனது வேட்புமனுவை காந்திநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார். இதற்காக குஜராத்துக்கு சென்றுள்ள அமித்ஷா இன்று அகமதாபாத்தில் 3 இடங்களில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சனந்த் பகுதியில் தனது ரோடு ஷோவை தொடங்கினார். இந்த ஊர்வலம் நல்சரோவர் சவுக் பகுதி வரை நடந்தது.
இதில் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா மீது மலர்கள் வீசப்பட்டன. அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
பின்னர் 2-வது ரோடு ஷோ காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் உள்ள ஜே.பி.கேட் முதல் கலோலில் உள்ள டவர் சவுக் வரை நடந்தது. அமித்ஷாவின் 3-வது ரோடு ஷோ இன்று மாலை 4 மணிக்கு ரனிப்பில் உள்ள சர்தார் படேல் சவுக்கில் தொடங்கி வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஜிவ்ராஜ் பார்க் சார் ரஸ்தாவில் முடிகிறது.
பின்னர் வெஜல்பூரில் குஜராத் மாநில பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.
#WATCH | Gujarat: Union Home Minister Amit Shah holds a roadshow in Kalol, Gandhinagar
— ANI (@ANI) April 18, 2024
Union HM Amit Shah is BJP's candidate from the Gandhinagar Lok Sabha seat. Congress has fielded its party secretary Sonal Patel from Gandhinagar.
Voting for all the 26 Lok Sabha seats in… pic.twitter.com/Yjgiz1AKw0
- மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார்.
- நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.
கிருஷ்ணாநகர்:
பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அங்கு ஹூக்ளியில் உள்ள அரம்பாக் நகரில் ரூ.720 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகருக்கு சென்றார். அங்கு அவர் ரோடு ஷோ நடத்தினார்.
திறந்த ஜீப்பில் நின்றபடி ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். அப்போது மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று மோடியை வரவேற்றனர்.
கிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரம், ரெயில், சாலை உள்ளிட்ட துறைகளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த திட்டங்கள் மேற்கு வங்காளத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டவை. இது மேற்கு வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தை அளிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் ரெயில்வே கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசு செலவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
- ஜந்தர் மந்தரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார்.
புதுடெல்லி:
இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.
அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, அதிபர் மேக்ரான் ஆம்பர் கோட்டை, ஹவா மகால் மற்றும் ஜந்தர் மந்தர் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் சென்றார். ஜந்தர் மந்தரில் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார்.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் மேக்ரானும் பங்கேற்றார். சாலை நெடுகிலும் கூட்டமாக திரண்டிருந்த மக்கள் இரு தலைவர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
#WATCH | People in large numbers welcome PM Modi and French President Emmanuel Macron during their roadshow in Jaipur, Rajasthan pic.twitter.com/JyhT8GgMhl
— ANI (@ANI) January 25, 2024
- மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தடவை அதை விட 2 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வாரணாசி தொகுதியில் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோடி கடந்த மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது சுமார் 3 லட்சம் பேர் ரோடு ஷோவில் கலந்து கொண்டனர். மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசி தொகுதிக்கு வந்து தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
17-ந்தேதி வாரணாசி தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது. எனவே 17-ந்தேதி பிற்பகல் அவர் வாரணாசி தொகுதியில் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தடவை அவரை 2-வது இடத்துக்கு கொண்டு வர பிரியங்கா விரும்புகிறார். இதற்காக அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்துள்ளார்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரியங்கா வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் பிரமாண்டமான ரோடு-ஷோ நடத்துகிறார். இந்த ரோடு-ஷோவில் சுமார் 2 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
16-ந்தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்கிறார். அன்றிரவு அவர் வாரணாசி வந்து தங்கி இருந்து மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர் ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார். இதேப்போல் நாளை மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் ரோட்ஷோ நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaGandhi
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனாலும் குஷ்பு வருத்தப்படாமல் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து சென்றும், வேனில் பயணித்தும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை பார்ப்பதற்காக பெருங்கூட்டம் திரண்டது. கூட்டத்தினர் மத்தியில் குஷ்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு ஆசாமி குஷ்புவை தவறான இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த குஷ்பு பின்னால் திரும்பி அந்த வாலிபரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு குஷ்புவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #Kushboo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்