என் மலர்
நீங்கள் தேடியது "Sabarimala"
- மாத பூஜை நாட்களில் மட்டுமே படி பூஜை நடத்தப்படுகிறது.
- 2037-ம் ஆண்டு வரை படிபூஜைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை அடுத்து சபரிமலைக் செல்வதற்காக தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். முன்னதாக மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து ஐயப்பனுக்கு பூஜை செய்தார். இந்த நிலையில், சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் நேற்று சன்னிதானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப் படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
நடப்பு சீசனையொட்டி, தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 250 மில்லி அளவுள்ள ஒரு டின் அரவணை விலை ரூ.80 ஆகும். அப்பம் ஒரு பாக்கெட் ரூ.35 விலையில் விற்பனையாகிறது. சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தளராமல் சாமி தரிசனம் செய்தனர். மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் நாளான இன்றே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- புதிய மேல்சாந்தி நடை திறந்து வழிபாடுகள் நடத்தினார்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை விழா தொடங்கியது.
இதற்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு சுத்தி பூஜைகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்று கொண்டார்.
அதன்பின்பு பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் அனுமதிக்கப்பட்டார்கள்.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து வழிபாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாளான இன்றே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான கன்னிசாமிகளும் முதல் நாளில் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சரண கோஷம் முழங்க 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெய் அபிஷேகம் செய்யவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோவிலில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் சுமார் 1250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- படி பூஜைக்கு கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும்.
- உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக பொருட்செலவில் நடத்தப்படுவது படி பூஜை ஆகும். இந்த படிபூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். இது குறித்து அவர் சன்னிதானத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். நடப்பு சீசனையொட்டி, தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 250 மில்லி அளவுள்ள ஒரு டின் அரவணை விலை ரூ.80 ஆகும். அப்பம் ஒரு பாக்கெட் ரூ.35 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சபரிமலையில் நேற்று கொட்டும் மழையிலும் பக்தர்கள் தளராமல் சாமி தரிசனம் செய்தனர். மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். சன்னிதானத்தில் மின்சார தேவையினை பூர்த்தி செய்ய தனியார் உதவியுடன் விரைவில் சோலார் மின் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
- முதல் நாளில் 276 பேர் சென்றதாக வனத்துறையினர் தகவல்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.
நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் நேற்று துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 41 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னரே விரதத்தை முடித்து கொள்வார்கள்.
சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பையில் இருந்தும், புல்மேடு காட்டு பாதை வழியாகவும் செல்லலாம். பெரும்பாலான பக்தர்கள் பம்பை வழியாகவே செல்வார்கள்.
புல்மேடு காட்டு பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்ல பக்தர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பிரச்சினை ஏற்பட்ட பின்பு காட்டு பாதை வழியாக செல்ல வனத்துறை அனுமதி வழங்கவில்லை.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தினமும் பகல் 2 மணி வரை பக்தர்கள் இந்த பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
வனத்துறை அனுமதி கொடுத்ததை தொடர்ந்து நேற்று சத்திரம், புல்மேடு வழியாக பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சன்னிதானம் சென்றனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் காட்டு பாதை வழியாக 276 பக்தர்கள் சன்னிதானம் சென்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஜோதிஸ் ஒழக்கல் கூறியதாவது:-
சபரிமலை செல்லும் காட்டு பாதையை பயன்படுத்த வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காட்டு யானைகளை கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்து வயது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனை கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் மறுத்தார். சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கூறிய அவர் போலீசாருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை முன்பே அச்சிடப்பட்டது, என்றும் அதில் தவறுகள் இருப்பதால் அந்த குறிப்பேட்டை வாபஸ் பெற இருப்பதாகவும், தெரிவித்தார்.
- தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
- ஐயப்ப பக்தர் ஒருவரின் காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1-ந்தேதியான நேற்று முன்தினம் முதல் நடை திறக்கப்பட்டு மண்டல, மகரவிளக்கு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் சபரிமலையில் இருந்து இறங்கி பம்பையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு அவருக்கு எதிரே மலையேறிக் கொண்டிருந்தனர். அதன்படி இருமுடி கட்டுகளுடன் மலையேறி வந்த ஐயப்ப பக்தர் ஒருவரின் காலில் திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதனால், அந்த பக்தர் வலிதாங்க முடியாமலும், தொடர்ந்து நடக்க முடியாமலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதைக்கண்ட மந்திரி ராதாகிருஷ்ணன் சிறிதும் தாமதிக்காமல் உடனே அந்த பக்தருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் நீவி விட்டு முதலுதவி அளித்தார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். தற்போது அந்த காட்சிகள் ''மக்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் சேவை'' என்ற தலைப்பில் கேரளாவில் வைரலாகி வருகிறது.
- இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
- பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.
ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை "ஐயப்பன்" நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும். இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.
1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியாக மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும். செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.
நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து 'ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது. ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.
நவாப் - "புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்". என்று கூறி விட்டார்.
அப்பெரியவர், "நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்" என்று வற்புறுத்தினார்.
நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் ஐயப்பனுக்கு அடிமையானார்.
என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்ேபர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன் என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.
1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள். சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று ஐயப்பனை நேரில் தரிசித்தனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது.
இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.
சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது.
கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதிலம் அடைந்த பகுதிகளை காணலாம்.
ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.
சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உச்சரித்து, அதாவது ஐயப்பன் திருவடிகளை சரண் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
பரசுராமர் செய்த பிரதிஷ்டை
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் பரசுராமர் என்றொரு கருத்து உண்டு. ஆனால் பரசுராமரின் காலத்தை திரேதா யுகம் என்று இதிகாசம் மூலம் அறிகின்றோம். ஒரு வேளை சாஸ்தாவின் அம்சமாக கேரளத்தில் அவதரித்த ஸ்ரீமணிகண்டன், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் ஆன்றோர்களின் கருத்து.
பாண்டிய வம்சத்து பந்தள மன்னர்கள்
பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரது மந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையில் இருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903- ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுப்படுத்தினர்.
- இன்றும், நாளையும் அதிகமானோர் வருவார்கள் என தகவல்.
- சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்ப ட்டதால் நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் வருகை களைகட்டியது.
கார்த்திகை முதல் நாளான 17-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
முதல் நாளில் மட்டும் கோவிலுக்கு செல்ல சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பினர். மேலும் முன்பதிவு செய்த நேரத்தில் வர முடியாதவர்கள் அன்று முழுவதும் ஏதாவது ஒரு நேரத்தில் வந்து தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கியூவில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை.
சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இம்முறை சபரிமலையில் அரசு சார்பில் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி தூய்மையான சபரிமலை, பிளாஸ்டிக் இல்லா சன்னிதானம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 13 இடங்களில் கூடுதல் முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக 1500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே நாளை ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் இன்றும், நாளையும் சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக கோவிலில் சிற்பபு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- இந்த ஆண்டு நடைதிறக்கும் போதே புல்மேடு, சத்திரம் பாதை திறக்கப்பட்டது.
- தற்போது புல்மேட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு வழக்கமான கூட்டம் வரதொடங்கியுள்ளது.
இதனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வழக்கமாக சபரிமலைக்கு குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டகயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீரில் செல்ல வேண்டும். மேலும் வண்டிபெரியாறு, சத்திரம், புல்மேடுவரை 30 கி.மீ தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ தூரத்திற்கு ஜீப் மற்றும் பஸ்களில் சென்று அங்கிருந்து 6 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதியில் நடந்து சென்றால் கோவிலை அடைந்து விடலாம். இதனால் இந்த பாதையை பக்தர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள்.
மண்டல பூஜைக்காக கோவில் நடைதிறக்கப்பட்டு 20 நாட்களுக்கு பின்னர் இந்த பாதை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடைதிறக்கும் போதே புல்மேடு, சத்திரம் பாதை திறக்கப்பட்டது. காலை 7 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு மகரவிளக்கு தரிசனத்தின்போது புல்மேட்டில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 107 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் தற்போது புல்மேட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த பாதை திறக்க்பபட்டதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் விரைவாக கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்யலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கடந்த 4 நாட்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை.
அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பிறகு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் பக்தர்கள் வெகுநேரமாக காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
கொரோன கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் ஆன்லைன், உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக முன்பதிவு விவரம் மூலம் தெரியவந்தது.
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சென்னை, பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் தமிழக பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் தரிசனம் செய்தார்.
ஐயப்பனை தரிசனம் செய்ததும் பக்தர்கள் அரவணை, அப்பம் ஆகியவற்றை வாங்கி சென்றனர். இதற்காக 20 லட்சம் டின் அரவணை மற்றும் 15 லட்சம் பாக்கெட் அப்பம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தினசரி 3 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1 லட்சம் லிட்டர் சுக்குநீரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
சீசனை முன்னிட்டு 6 கட்டங்களாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
- சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார்.
- ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார்.
இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார். அப்போது வழியில் உள்ள மலையில் சபரி என்கிற வித்யாதரப் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள்.
மணிகண்டனை உபசரித்த அந்த சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார். தன் சாபம் நீங்கிய அந்த மலை தன் பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஐய்யப்பனிடம் வேண்டினாள். அதன் காரணமாக சபரிமலை என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மசாரி
சபரிமலையில் யோக பட்டம் திருக்கால்களில் விளங்கக் காட்சியளிக்கின்ற ஸ்ரீமணிகண்டனை அனுக் ரஹ மூர்த்தி என்று சொல்கிறார்கள்.
இவர் நைஷ்டிக பிரம்மசரியம் என்ற கடும் தவத்தில் எப்போதும் நிலை பெற்றிருப்பதனால்தான் பருவ வயதுடைய பெண்களை சந்நிதானத்தில் அனுமதிப்பதில்லை.
- சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள்.
புதுடெல்லி:
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். பெரும்பாலானோர், தலையில் இருமுடி ஏந்திச் செல்வது வழக்கம்.
அந்த இருமுடி பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய் மற்றும் வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள், இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும். ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், நடப்பு சபரிமலை சீசனில் ஜனவரி 20-ம் தேதிவரை விமானத்தில் தேங்காய்களை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி அளித்துள்ளது.
வழக்கமாக பயணிகள் அமரும் பகுதியில் குறிப்பிட்ட எடை அளவு கொண்ட கைப்பையை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அப்படி தேங்காய்களை கொண்ட கைப்பையை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எக்ஸ்ரே பரிசோதனை, வெடிகுண்டு கண்டறியும் டிடெக்டர் பரிசோதனை, வழக்கமான பரிசோதனை ஆகியவற்றுக்கு பிறகுதான் தேங்காய்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- நிமிடத்திற்கு 60 முதல் 80 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- தினசரி 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப ன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடை திறக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உடனடி தரிசனத்திற்கும் முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சன்னிதானம் முதல் பம்பை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பிறகு மாலை 4 மணிக்கு நடை திறப்பதை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கக்கப்பட்டது. கூடுதலாக 1 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
வார நாட்களில் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளது.
தற்போது தினசரி 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிமிடத்திற்கு 60 முதல் 80 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, ஒரு பக்தருக்கு ஒரு வினாடி என்ற விகிதத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கோவில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் நேற்று முதல் நடை அடைக்கப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக ஏற அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சன்னிதானம் பகுதியில் காத்திருந்து அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த பின்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.