search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salaries"

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
    • அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.

    இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-

    பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும்
    • சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் தோறும் 15 தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும் நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தில் போராட்டம் செய்தால் மட்டுமே சம்பளத்தை வழங்குகின்றனர்.

    போராட்டம் செய்யும் நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்வது மேலும் சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை

    தங்களிடம் பிடித்தம் செய்யும் பிஎஃப் பணத்திற்கு ரசீது கொடுக்காமல் பணத்தை வழங்காமல் மிகுந்த மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி வாசலில் முற்றுகையிட்டு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது நகராட்சி ஆணையர் பாலாஜி பேச்சுவார்தை செய்தார். முன்தகவல் கொடுக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு கவர்னர் கிரண்பேடி தான் காரணம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #cmnarayanasamy #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, காரைக்கால் ஜெய பிரகாஷ் நாராயணன் ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு சார்ந்த சம்பள மானியமாக நடப்பாண்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் .அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்துள்ளது.

    இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரின் நிதி அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை கவர்னர் மதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அனுப்பிய கோப்புக்கு அனுமதியும் தரவில்லை.

    அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தோடு இயங்க முடியாது. பல நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக இயங்குகிறது.

    கதர் வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், கூட்டுறவு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எண்ணாமல் மக்களுக்கான சேவை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. கவர்னர் லாபத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என சொல்கிறார்.

    பிற அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி தர முட்டுக்கட்டையாக உள்ளார். விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும்.

    சம்பந்தப்பட்ட துறைகளை அழைத்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கவர்னர் உடனடியாக அதை அமல்படுத்த சொல்கிறார். அந்த அறிக்கையில் ஆட்குறைப்பு மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தம், சிக்கனம் ஆகியவற்றையும் பரிந்துரை செய்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல கடமைகள் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும். கவர்னருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால்தான் அவர் அரசு நிர்வாகத்தை முடக்க நினைக்கின்றார்.

    அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இதன்பிறகு கவர்னரின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    புதுவை ஜிப்மரின் கிளை 50 ஏக்கரில் சேதராப்பட்டில் அமையவுள்ளது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடனடி விபத்து மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு மையம், இதயநோய் சிகிச்சை, வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜிப்மர் கிளை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.ஆயிரத்து 200 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதற்கான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். புதுவையில் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் 10 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் இருந்தது.

    தற்போது புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டாக குறைத்துள்ளது. 8 ஆண்டுக்கு பிறகும் படிப்பை முடிக்காமல் 50 மாணவர்கள் உள்ளனர்.

    இவர்கள் என்னை சந்தித்து தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேசி கூடுதலாக ஒரு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க கோரியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #cmnarayanasamy #governorkiranbedi

    7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    7-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    ஊதிய உயர்வை அமல் படுத்த வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் படி மதுரை கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.

    மதுரை புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் பொன்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பம்பு ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    அப்போது சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். #tamilnews

    ×