என் மலர்
நீங்கள் தேடியது "sales"
- விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4, 919 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 1,961 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.23.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.50.40 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,109 கிலோ. கொப்பரை கிலோ ரூ.50.15 முதல் ரூ.75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.72.15.ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.
இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு, 7,998 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,251 கிலோ. விலை கிலோ ரூ.21.15 முதல் ரூ.25.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.75.
16 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 194 கிலோ. விலை கிலோ ரூ.61.10 முதல் ரூ.80.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.76.65. ஏலத்தில் மொத்தம் 40 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்து நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 85 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 54 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை பசு விற்பனையானது.
- காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 56 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 36 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- கடும் குளிர் காலநிலையிலும் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த மல்லி இன்று கிலோவுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.600 என விற்கப்பட்டு வருகிறது. அதே போல ரூ.600 க்கு விற்ற முல்லை ரூ.200வரை விலை குறைந்து இன்று ரூ.400 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோவுக்கு) வருமாறு :-
மல்லிகை- ரூ.600, முல்லை- ரூ.400, ஜாதி மல்லி- ரூ.280, காக்கட்டான்- ரூ.200, கலர் காக்கட்டான் - ரூ.200, சி.நந்தியா வட்டம் - ரூ.180, சம்மங்கி- ரூ.15, சாதா சம்மங்கி- ரூ.30, அரளி- ரூ.150, வெள்ளை அரளி- ரூ.150, மஞ்சள் அரளி- ரூ.150, செவ்வரளி- ரூ.180, ஐ.செவ்வரளி- ரூ.180, நந்தியா வட்டம்- ரூ.180. தற்போது ஐப்பசி மாத நிலவரப்படி குளிர் காலநிலை நிலவுகிறது.
வருகிற கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடும் குளிர் காலநிலை நிலவும். அதற்கடுத்து தை மாதம் பொங்கல் பண்டிகை வரை பூக்கள் விற்பனை சீசன் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வாரம் கூடிய சந்தையில் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், முதல் தரமான தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சின்ன வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
உடுமலை
உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் பஸ் நிலையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்வதாக குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 37) என தெரியவந்தது. லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
- கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-
மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூட வேண்டும்.
- மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தர்ஹா பெரிய கந்தூரி விழா தொடர்பாக 25.11.2022 கொடியேற்றம் மற்றும் 04.12.2022 அன்று சந்தனகூடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு 25.11.2022 வெள்ளி கிழமை மற்றும் 04.12.2022 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரைவிற்பனை மதுபா னகடைகள் அனைத்தும் மூடவும் அன்றைய நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூடவும், மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிடப்படுகிறது.
மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும்ப ட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராள மானோர் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தனர்.
திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால் இதற்கான விதை தரமான முறையில் வழங்கப்படவில்லை , போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைத்திடவும், சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்தி டவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்தனர்.
- சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
- சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.
சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.
இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.
மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள்.
- தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
- ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல்லடம் :
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும் என்பதால் இதை சர்க்கரை உடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.மேலும் தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கட்டுப்படுத்த இயல்கிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் தேங்காய் உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும். பல்லடம்- தாராபுரம் ரோட்டில் வேலுமணி என்ற விவசாயி தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், முன்பு சரிவர விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது தேங்காய் பூவின் மகத்துவம் தெரிய வந்துள்ளதால்,மக்கள் விரும்பி உண்கின்றனர்.மேலும் வாகனங்களில் செல்வோர் வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.