என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sales increase"
- ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
- பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெர்ரி செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறியதாவது:-
ஸ்ட்ராபெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் பழங்களை அறுவடை செய்யலாம். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்திருந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
அவை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
- தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.
சென்னை:
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.
இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.
மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு
பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
- ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம்:
தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைத்தவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் விவசாயிகள் அனுப்புகின்றனர்.
சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும்.
இந்த நிலையில் வருகிற 4-ம் தேதி ஆயுதபூைஜ விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சாமிக்கு படையலிட்டு பூஜை ெசய்து வழிபடுவார்கள். இதையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.
சேலத்தில் தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1300 முதல் ரூ.1350 என விற்பனை செய்யப்பட்டது. வருகிற தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்