search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samba crop"

    • 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.
    • தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் நெற் பயிரில் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) ஈஸ்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ மழை விட்டு, விட்டு பெய்து வருவதால், சம்பா, தாளடி நெற் பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது.

    இலை சுருட்டுப் புழுக்கள் இலையை மடக்கி, அடிப்பகுதியில் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெண்மையாக தென்படும்.

    மேலும், இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் மடக்கப்பட்ட இலைகளுக்கு இடையில் காணப்படும்.

    தீவிர தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

    இலை சுருட்டுப்புழுத் தாக்குதல் உள்ள வயல்களில் விளக்கு பொறிகளை ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவா்ந்திழுத்து அழிக்கலாம்.

    பறவை இருக்கைகள் ஒரு ஹெக்டேருக்கு 40 - 50 எண்கள் அமைப்பதன் மூலம் புழுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

    தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும்.

    5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.

    மேலும், இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல், அதாவது தூா் கட்டும் தருணத்தில் 10 சதவீதம் இலைகளில் தாக்குதல் அல்லது பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் இலைகளில் தாக்குதல் இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. அசாடிராக்டின் அல்லது 60 மி.லி. குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் அல்லது 400 கிராம் காா்டாா்ப் ஹைட்ரோகுளோரைடு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.
    • தொடர்ந்து மழை பெய்வதால் சாம்பா நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:-

    மேட்டூர் அணை கடந்த ஜுன் 12-ந் தேதி திறக்கப்பட்டு காவிரி நீர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டது.

    இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போதுமான தண்ணீர் வராததாலும், போதிய மழை பெய்யாததாலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் ஒரு சில இடங்களில் மட்டும் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.

    தற்போது சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    முத்துப்பேட்டை தாலுகா தில்லை விளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், தம்பிக்கோட்டை கீழக்காடு, மேலநம்மகுறிச்சி, கோவிலூர், ஜாம்புவானோடை, ஆலங்காடு, உப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் முத்துப்பேட்டை பகுதிகளில் சம்பா நடவு பணிக்காக வயல்களில் விவசாயிகள் நாற்று பறிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    திருவாரூர் அருகே சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் விட கோரி விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே மாங்குடி, திருநெய்ப்பேர், குன்னியூர், வடகரை ,ஆத்தூர், கூடூர், கல்யாணமகாதேவி, புதுப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாண்டவையாற்றில் தண்ணீர் விட்டு பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை.

    இதனையடுத்து திருவாரூர் அருகே மாங்குடி பாண்டவையாறு பாலத்தின் அருகே அனைத்து கட்சியை சேர்ந்த விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பாண்டவையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தியும், தண்ணீர் முறையாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் அதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    ×