search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "same family"

    நாகர்கோவிலில் இன்று கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார்.

    இவரது வீடு 3 மாடி கொண்ட பங்களா வீடு ஆகும். இங்கு சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர்.

    வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கி விடுவார். இன்று காலை நீண்டநேரமாகியும் கடையை திறக்க செல்லவில்லை. இதனால் கடையில் வேலைபார்க்கும் ஊழியர் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழில் அதிபர் சுப்பிரமணி தொழிலுக்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வேதனையில் சுப்பிரமணி, தானும் வி‌ஷம் குடித்து குடும்பத்தினருக்கும் கொடுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார். 

    உடுமலையில் கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி ஜோதிமணி (60). இவர்களது பேரன் செல்வருத்ரன்(3), உறவினர் நாச்சிமுத்து (75). ஆகியோர் ஒரு காரில் உடுமலையில் உள்ள முத்துசாமியின் இளைய மகளை பொங்கல் பண்டிகைக்கு அழைப்பதற்காக சென்றனர்.

    காரை முத்துசாமி ஓட்டிச் சென்றார். கார் கொண்டாரசம்பாளையம் அருகே சென்ற போது திடீரென கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, 3 வயது சிறுவன் செல்வருத்ரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய முத்துசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை அடுத்த கொப்பகரை அருகே உள்ள பால்னம்பட்டி கெங்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி சீதா (40). இவர்களுக்கு ரஞ்சிதா (23) என்ற மகளும், ரமேஷ் (21) என்ற மகனும் உள்ளனர்.

    வெங்கட்ராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே ஒரு குடிசை வீட்டை கட்டி அதில் சமையல் செய்து வந்தனர். நேற்று சீதா அந்த குடிசை வீட்டில் புளிசாதம் சமைத்தார். பின்னர் அந்த சாதத்தை இரவு 4 பேரும் சாப்பிட்டனர். 

    சிறிது 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீதா புளிசாதம் செய்தபோது பல்லி விழுந்ததாகவும், அதனை அவர்கள் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. 
    தினமும் மகன் குடித்துவிட்டு வந்ததால் வேதனை அடைந்த குடும்பத்தில் உள்ள 4 பேர் வி‌ஷம் குடித்தனர். இதில் பாட்டி, தாய் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினத்தை சேர்ந்தவர் காசிநாதன் (50), இவரது மனைவி மாரியம்மாள் (47), இவர்களின் மகன் கார்த்தி, மருமகள் கவிதா (25), மாரியம்மாள் தாயார் வேதவல்லி (60) ஆகியோர் மகாதேவப்பட்டினத்தில் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். 

    கார்த்தி வேலைக்கு செல்லாதது குறித்து அவரது மனைவி கவிதா கண்டித்துள்ளார். இதனால் கடத்த 15 நாட்களாக தினமும் குடித்து விட்டு வந்து கார்த்தி வீட்டில் பொருட்களை உடைத்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த காசிநாதன், கவிதா, மாரியம்மாள், வேதவல்லி ஆகிய 4 பேரும் நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மாரியம்மாள், வேதவல்லி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இது குறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பொழிச்சலூர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மீன் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினார்கள். இதனால் காஜா மொய்தீன் அவதிப்பட்டார்.

    மனம் உடைந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு காஜா மொய்தீன், அவரது மனைவி சர்மிளா (30), மகள் பர்தானா (12), மகன் முகமது ஆசிப் (8) ஆகிய 4 பேரும் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குடும்பத்துடன் வி‌ஷம் கலந்து உணவை சாப்பிட்டு விட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.

    அக்கம் பக்கத்தினர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் ஆப்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், 2 குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×