என் மலர்
நீங்கள் தேடியது "sand lorry"
சேலம் கனிம வளத்துறை (புவியியல் மற்றும் சுரங்கம்) துணை இயக்குநர் சுரேஷ் நேற்று இரவு 7.30 மணிக்கு ஜலகண்டாபுரத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, எடப்பாடி வட்டம் ஆடையூரிலிருந்து, தாரமங்கலம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தார்.
ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்க துணை இயக்குநர் சுரேஷ் மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் லாரியை சிறைபிடித்து இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருந்தது.
மேலும் மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இன்று காலை அசுர வேகத்தில் வந்த மணல் லாரி குண்டலப்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்ற திருப்பதி மனைவி சாத்தாவு(வயது43) என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலை குண்டலப் பட்டிபிரிவு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ் பெக்டர் சுகு மாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிராமமக்கள் சார்பாக 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகேயுள்ள காக்கங்கரை ஆற்று பகுதியில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தி செல்கின்றனர். இன்று மதியம் ஒரு டிப்பர் லாரி மணல் கடத்தி கொண்டு காக்கங்கரை பஸ் நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி கிரா மத்தில் இருந்து சிறுவன் உள்பட 3பேர் ஒரே பைக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வேலம்பட்டி கொட்டாவூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். காக்கங்கரை பஸ் நிறுத்த வளைவில் பைக் மீது மணல் கடத்தல் லாரி மோதியது.
இந்த கோர விபத்தில் போச்சம்பள்ளி கொட்டாவூரை சேர்ந்த மணி, மோட்டு என்ற 2 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த குனிச்சியை சேர்ந்த சிறுவன் வேலு மகன் பூவரசன் (வயது 26) படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய மணல் கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கந்திலி போலீசார் இறந்தவர்களின் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல், தத்தைமஞ்சி ஏரி, சவுடுமண் குவாரிகளில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த நிலையில் மணல் லாரிகளால் மீஞ்சூர் நகரம் முழுவதும் தூசி பரவுகிறது, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது என்றும் காலை, மாலை வேளைகளில் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் மணல் குவாரிகளை காலை 10 மணிக்கு மேல் இயக்கவும், மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மணல் எடுப்பதை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மீஞ்சூர் காட்டுச்சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வராததால் அங்கு பரபரப்பு நிலவியது.
அதன்பிறகு மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews