search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandalwood festival"

    • சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.
    • மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர்.

    ஏர்வாடி:

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 850 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

    சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் இன்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை மே9-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது.

    மே 18-ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது. மே 19-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடி யேற்றமும் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.

    மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதா யத்தினரும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களி லிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூன் 7-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்ன தானம் வழங்கப்படும். 

    • சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 351-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.

    • ேகாரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்து புல் ஹஜ்ரத் காஜாசையத் சுல்தான் அலாவுதீன், அவு லியாக்களின் தர்காவில் சந்தனக்கூடு என்னும் உரூஸ் மத நல்லிணக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அதி காலை 6 மணியளவில் உரூஸ் கொடி பாரம்பரிய ஹக்த்தார்கள் முன்னிலையில் யாசின் ஓதிதுஆவுடன் ஏற்றப்பட்டன.

    இதில் திரளான முஸ்லீம்கள் மற்றும் பொது மக்கள் ஜாதி, மத பேதமின்றி பங்கேற்று அவுலியாக்களின் நல்லாசி பெற்றனர்.

    மாலை நடைபெறும் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்கு கள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம் ஒட்டகம், நாட்டிய குதிரை யுடன் சந்தனக்கூடு ஊர்வ லம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும். இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சம்

    சுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

    • பஞ்ச் பிபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
    • பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாத்திமா நகரில் அமைந்துள்ள பஞ்ச் பிபீ தர்காவில் 4 ஆண்டுகள் கழித்து சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதில் காலை கொடியே ற்றத்துடன் தொடங்கிய சந்த னக்கூடு திருவிழாவானது இரவு 8 மணி அளவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இங்கு வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதில் சத்திய மங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, கோபி, ஈரோடு, பவானி, திருப்பூர், மேட்டூர், உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    4 ஆண்டுகள் கழித்து நடக்கும் சந்தனக்கூடு திருவிழா என்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    • ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பிரான்மலை சேக் அப்துல்லா அவுலியா தர்கா சந்தனம் பூசும் விழா மிகவும் பிரசித்தி பெற்ற தாகும்.

    பிரான்மலையில் 2500 அடி உச்சியில் அமைந் துள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லா அவர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பிரான்மலை அடி வாரத்தில் உள்ள தோப்பு தர்காவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த வர்களும் நேர்த்திக் கடன் வைத்து தங்கள் பிரார்த்த னைகளை கந்தூரி எனப்படும் சமபந்தி விருந்து அளித்து நிறைவேற்றுவது வழக்கம்.

    இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் (ரயியுல் அவ்வல் பிறையில்) சந்தனம் பூசும் விழாவிற்காக கொடி யேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா விற்காக மலையடிவாரத்தில் துவா ஓதப்பட்டு கொடி யேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக 2500 அடி உயரத்தில் உள்ள பிரான் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்காவிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

    வருகிற 6-ந் தேதி சந்தனம் பூசும் விழா நடக்கிறது. அன்று இரவு பிரான்மலை 5 ஊர் கிராமத் தார்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் சுற்று வட்டார பெரியோர்கள் முன்னிலையில் சந்தனக் குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 2500 அடி உயரமும் 7 மைல் தூரமுள்ள மலை உச்சியை சென்ற டைந்து 7-ந் தேதி அதிகாலை மலைமீது உள்ள தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடைபெற உள்ளது. இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    • ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம்
    • பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மந்தவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஹசாத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியாதர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தர்காவில் மாலை அணிவித்து பாத்தியா நடத்தினர். தொடர்ந்து பிறைகொடி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,நகர செயலாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்.சந்தனக்கூடுவிழா கமிட்டி நிர்வாகிகள் ஜான் பாஷா, அசாதுல்லா, ஜெ. எஸ். சர்தார், ஷமியுள்ளா, ஷாஜகான், முபாரக், ஹாஜி ஷரீப்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது.
    • பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

    இந்த நிலையில் தர்காவில் நடைபெற்று வரும் மராமத்து பணிகள் குறித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாகூர் ஆண்டவருக்கு மலர் போர்வை வழங்கி மலர் தூவி துவா செய்தார்.

    மேலும் தர்காவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

    தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்ட ஹஜ் யாத்திரை தமிழக முதலமைச்சர் முயற்சியால் மீண்டும் தமிழகத்தில் இருந்து தற்போது தொடங்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன மரக்கட்டைகள் தமிழக அரசு சார்பில் விலை இல்லாமல் வழங்கப்படுவதாகவும், இதே போல் ஏர்வாடி தர்காவிற்கும் விலை இல்லாமல் சந்தன கட்டைகள் வழங்க நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாகூர் ஆண்டவர் தர்கா வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய யானை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய யானை வாங்க தமிழக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்
    • சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி, களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சிறப்பு தொழுகை

    இந்த ஆண்டு கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ஊர்வலத்தில், வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அப்போது உலக நன்மைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    மதநல்லிணக்க விழா

    ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாகவும் இது நடந்து வருகிறது.

    தா்ஹாவுக்கு வந்தடைந்த சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி, களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா்.

    இந்த விழாவில் வைப்பார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.

    ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து மத பாகுபா டின்றி கொண்டா டுவதால் இவ் விழாவானது மத நல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

    • சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பரமத்திவேலூர் தர்கா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தர்கா பள்ளிவாசலை வந்தடைந்தது. காலை நடைபெற்ற மீலாது விழா வில், இஸ்லாமிய பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.முன்னதாக பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×