என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Satankulam"
- பன்னம்பாறை வேதக்கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழைநீர் வடியாமல் உள்ளது.
- இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வேதக் கோவில் தெருவில் தசரா நேரத்தில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஒரு மாதத்தி ற்கும் மேலாக தேங்கிய மழை நீரில் தான் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் கால்களில் சேற்றுப்புண் ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.
இது பற்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு களை அதிகாரி களிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
- முகாமில் மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோசனையின்படி சாத்தான்குளம் வட்டாரத்தில் கந்தசாமிபுரம், சுப்பராயபுரம், பொத்தகாலன்விளை, தாய்விளை, வாலிவிளை , பெரியதாழை மற்றும் எள்ளுவிளை ஆகிய 7 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர்.ஸ்வீட்லின் சசிதா தலைமையிலான குழுவினரும், ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினரும், படுக்கப்பத்து சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் குருசாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம் சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவத் திட்ட கிராம பெண் தன்னார்வல பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மக்களை தேடி மருத்துவத் திட்ட பெண் தன்னார்வல பணியாளர்கள் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
- சித்த மருத்துவ அலுவலர் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக பேசினார்.
- முதல் கட்டமாக போலையர்புரம் நடுநிலைப்பள்ளி, கொழுந்தட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதி பள்ளி மாணவ- மாணவி களுக்கு முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெகதீஷ் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு குடிநீர் தயார் செய்து வழங்கினர்.
இதன் தொடக்கமாக போலையர்புரம் டி.என்.டி.றி.ஏ.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கிங்சிலி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார்.
சித்த மருத்துவ அலுவலர் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக பேசினார். முதல் கட்டமாக போலை யர்புரம் நடுநிலைப்பள்ளி, கொழுந்தட்டு ஆர்.சி. தொடக்கப்பள்ளி, பொத்தகாலன்விளை ஆர்.சி.ஆண்கள் மற்றும் பெண்கள் தொடக்கப்பள்ளிகள், கொழுந்தட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருந்தாளுநர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
- சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் சுத்தமான நீரில் வளரும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்களை ஒழிக்க கம்பூசியா மற்றும் கப்பீஷ் மீன்கள் வீடுகளில் நீர்தொட்டிகளில் விடப்பட்டன.
- பூட்டிய நிலையிலே உள்ள வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி சவாலாக உள்ள நிலையில் கீழ்நிலை தொட்டிகளில் மீன்கள் தொடர்ந்து விடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
சாத்தான்குளம்:
தமிழக அரசின் தீவிர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் பொற்செல்வன் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் சுத்தமான நீரில் வளரும் டெங்கு காய்ச்சலை பரப்பும் எடிஸ் கொசு புழுக்களை ஒழிக்க கம்பூசியா மற்றும் கப்பீஷ் மீன்கள் வீடுகளில் உள்ள ஆழ்நிலை நீர் தேக்க தண்ணீர் தொட்டிகள், நீர்நிலைகள் மற்றும் கொள்கலன்களில் விடப்பட்டன.
சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமையிலான மஸ்த்தூர் பணியாளர் குழுவினர் இதனை வீடுகள் தோறும் விட்டு வருகிறார்கள்.
முதற்கட்டமாக சாத்தான்குளம் செட்டி யார் கீழத்தெரு, மேல சாத்தான் குளம், பங்களாத்தெரு, மேல ரத வீதி, சவரிமுத்து நாடார் தெரு, ஆர்.சி.கோவில் தெரு மற்றும் தட்டார் தெற்கு தெரு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் விடப்பட்டன.
தொடர்ந்து தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலையில் முதியோர்கள் உள்ள வீடுகள், பூட்டிய நிலையிலே உள்ள வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி சவாலாக உள்ள நிலையில் கீழ்நிலை தொட்டிகளில் மீன்கள் தொடர்ந்து விடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர். தேவைப்படுவோர் அணுகும் பட்சத்தில் அனைத்து தொட்டிகளிலும் விடப்படும்.
ஏற்கனவே களப்பணி யாளர் மூலம் கொசு புழு ஒழிப்பு பணி, தண்ணீர் தொட்டியில் அபேட் மருந்து தெளிப்பது, முதிர் கொசுவை அழிக்க வீட்டினுள் புகை மருந்து அடித்தல் போன்ற பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் போது சுகாதார ஆய்வாளர் அருண், மஸ்தூர் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- வட்டார அளவிலான மகளிர் சுய உதவித்குழு பங்கேற்ற சிறுதானியஙகள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
- இதில் 15 ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று, பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்து கண்காட்சியாக வைத்திருந்தனர்.
சாத்தான்குளம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் வட்டார அளவிலான மகளிர் சுய உதவித்குழு பங்கேற்ற சிறுதானியஙகள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. துணை வட்டார வளச்சி அலுவலர் (சத்துணவு) பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார மேலாண்மை அலகு மேலாளர் ரோஸ்லின் வரவேற்றார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பாரம்பரிய உணவு குறித்தும், அதனை மீண்டும் வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என விளக்கி பேசினார்.
இதில் 15 ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று, பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்து கண்காட்சியாக வைத்திருந்தனர். சிறப்பாக உணவுகளை தயாரித்த முதலூர் மகளிர் சுய உதவிக்குழு முதலிடமும், பெரியதாழை மகளிர் சுய உதவிக்குழு 2-ம் இடமும், பிடானேர ஊராட்சி மகளிர் குழு 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவிலான உணவு திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் உதவி திட்ட அலுவலர்கள் கனகராஜ், அருண்பிரசாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, உதவி பொறியாளர் கீதா, இளநிலை உதவியாளர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டல் ஜெயா நன்றி கூறினார்.
- முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
- சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
தற்போது பருவமழை பெய்து வருவதால் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோச னையின் பேரில் சாத்தான்குளம் வட்டாரத்தில் வாலத்தூர், பொத்தகாலன்விளை, மனோ ரம்மியபுரம், சங்கரன் குடியிருப்பு, புத்தன்தருவை, பெரியதாழை ஆகிய 6 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது .
முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், கிராம சுகாதார செவிலியர் மாலதி, செவிலியர் பவித்ரா, மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் ஷேர்லி, ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சி மூலம் ஓட்டு மொத்த துப்புரவு பணி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது .குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. வாலத்தூர், பொத்தகாலன் விளை கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியா ளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள் ளப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இதே போன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
- சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர்.
- நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில் போதிய மழை பெய்து தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் நகரில் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக வந்து கும்மியடித்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் அபிஷேகம் நடத்தினர். இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி தலைவி பரமேஸ்வரி தலைமையில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் மாயவன முத்துசாமி, துணைத்தலைவர் இசக்கி முத்து, செயற்குழு உறுப்பினர்கள் செல்வ முத்துக்குமார், முத்துக்குமார், புத்தன்தருவை கிளை கமிட்டி தலைவர் ஈஸ்வரன், செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட இந்து முன்னணியினர், இந்து அன்னையர் முன்னணியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
- முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம் உட்பட்ட கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
முதல் நாள் ஸ்ரீவெங் கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம், 1, 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தாசில்தார் ரதிகலா, தங்கையா, கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனி வேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட வர்கள் பங்கேற்ற னர்.
2-ம் நாளான இன்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டி யிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், நாளை (18-ந்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது.
- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- விசாரணையில், அவர் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னத்துரை என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எரிசாராயம் கொண்டு சென்றததும் தெரியவந்தது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சடையன்கிணறு பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னத்துரை (வயது 45) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எரிசாராயம் கொண்டு சென்றததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து எரிசாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.
- ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. வேதக்கோவில் பகுதியில் இருந்து முதலூர் செல்லும் சாலை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.
ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியபோது அதில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது சகதி நீர் பாய்வதால் மிகுந்த சிரமத்தில் சென்று வர வேண்டிய உள்ளது. இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நெடுச்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் இந்த பள்ளங்களால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க இந்த சாலையோர பள்ளங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- திருச்செந்துர் கோட்டத்தி ற்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக் குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய உபமின்நிலை யங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- எனவே அந்த பகுதியில் மின் வினியோகம் பெறும் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.
உடன்குடி:
திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்துர் கோட்டத்தி ற்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக் குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய உபமின்நிலை யங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்தர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் மின் வினியோகம் பெறும் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயர்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம, நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டு கொண்டான்மாணிக்கம்,
நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம், அம்பலச்சேரி,
அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, நயினார்பத்து.செட்டியாபத்து வாத்தியார் குடியிருப்பு, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, பெரிய புரம், தீதத்தா புரம், தண்டுபத்து, சிதம்பரபுரம் வட்டன்விளை சியோன்நகர், சுதந்திர நகர் நயினார்புரம் வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்ட ங்காடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளர்.
- பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.
- தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
இன்று காலை சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை தாசில்தார் தங்கையா கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பேரணியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, பேரூராட்சி மன்ற தலைவர் ரெஜினா ஸ்டெல்லா பாய், சுகாதாரத்துறை ஆய்வாளர் கிரிஸ்டோபர் செல்வதாஸ், சாத்தை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 400 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான தேசிய கொடியை பேரணியாக கொண்டு சென்றனர்.
தாலுகா அலுவலகலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வாசகசாலை பஜார் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்