என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "saurashtra"
- முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.
ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.
தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
- காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
- தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.
2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது
இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
கோவை:
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.
இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.
இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது.
- சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும்
பரமக்குடி
பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது. சங்க தலைவர் மாருதி ராமன் தலைமை தாங்கினார். எமனேசுவரம் சவுராஷ்டிரா சபை தலைவர் சேசைய்யன், பரமக்குடி சபை தலைவர் மாதவன், சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகையன், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர்கள் கோவிந்தன், கங்காதரன் வரவேற்றனர்.பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு தீர்மானத்தை முன்மொழிந்தார். மதுரை சவுபாக்கியா தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சவுராஷ்டிரா சமூகத்திற்கு மொழி வாரி சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசு பணியில் 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதீஷ் 24 ரன்னும், வாசிம் ஜாபர் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. வாசிம் ஜாபர் 11 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 35 ரன்னிலும், அக்ஷய் வாத்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அக்ஷய் கார்னிவார் 18 ரன்னிலும், மொகித் காலே 38 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிலைத்து நின்று ஆடிய ஆதித்யா சர்வாதே 133 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். விதர்பா அணி 92.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சவுராஷ்டிரா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தர்மேந்திரசிங் ஜடேஜா 6 விக்கெட்டும், கம்லேஷ் மக்வானா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் 12 ரன்னிலும், ஹர்விக் தேசாய் 8 ரன்னிலும், மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்பித் வசவதா 5 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்ஷய் வாக்கரே ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.
இந்நிலையில், இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதானமாக விளையாடியது. மக்வானா 14 ரன்கள் எடுத்த நிலையில் சர்வாதேவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மன்கட் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரை வாக்கரே பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவைப்பட்டது.
நெருக்கடிக்கு மத்தியிலும் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ஜடேஜா, அரை சதம் கடந்தார். ஆனால், அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிஏ ஜடேஜா 17 ரன்னிலும், உனாத்கட் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே, 2ம் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சில் 98 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #RanjiTrophyFinal #VIDvSAU
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்