என் மலர்
நீங்கள் தேடியது "SB Study"
- போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
- பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மக ளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலை யம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், கலால் 4 போலீஸ் நிலையங்கள் என 55 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க ளின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு திருவண் ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு பராமரிப்பு கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாருட னான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் போலீசார், பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என் பது குறித்து அவர் எடுத்து ரைத்தார். மேலும் போலீசா ரின் குறைகளையும் கேட்ட றிந்தார்.
தொடர்ந்து கடந்த மாதத் தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி னார்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண் டுகள், இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டார்
- ஜோலார்பேட்டை ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளள், ஆவணங்கள் மற்றும் ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆய்வு செய்தார்.
மேலும் போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பில் தேவைப்படும் வசதிகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் தாமலேரி முத்தூர் மேம்பாலம், ஜோலார்பேட்டை ஜங்ஷன், சந்தைக்கோடியூர், பொன்னேரி, மண்டலவாடி, கேத்தாண்டப்பட்டி, பச்சூர், உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.