என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "School buildings"
- சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
- மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67 லட்சம் பங்களிப்புடன் புதிய தாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாக்கியலீலா, நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்று பேசினார். விழாவில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பார்த்தி பன், தி.மு.க. ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், வட்டாரத் தலை வர்கள் ஆழ்வை கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிர மணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்து மாலை, யூனியன் துணைத் தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, தொடக்கப் பள்ளி ஜான்சன் ஊடக பிரிவு முத்துமணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பால கிருஷ்ணன், குமரன், இசக்கி ராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- தொடர்ந்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தவமணி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர்கள் முருகன், கந்தவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், உட்பட தி.மு.க. நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால், சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பல்லடம் திமுக. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், அதிமுக., இளைஞரணி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமை ஆசிரியை விஜயராணி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
செய்யாறு:
வெம்பாக்கம் ஒன்றியத்தில்.கனிகிலிப்பை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய சிமெண்டு சாலை, பூனை தாங்கல் ஊராட்சி சேனியநல்லூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை, மாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான கட்டிடம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு தலைமை வகித்தார்.வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து வைத்தார்.
இதில் மாவட்டஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜே.கே. சீனிவாசன், சங்கர், தினகரன், ஞானவேல், திமுக நிர்வாகிகள் பார்த்திபன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவலூர் அரசுப்பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.28லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சி மன்றம் சிவலூர் அரசுப்பள்ளி கட்டிடம் சிதில மடைந்துகாணப்பட்டதால் அதனை புதுப்பித்து கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.28லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய கட்டிடங்கள் கட்டிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பள்ளிகட்டிடங்கள் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை ஊராட்சிதலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமைஆசிரியை பவுலா ராதிகா, ஆசிரியை ராதை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
- இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு
- ஒன்றிய குழு தலைவர் தகவல்
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றிய குழு கூட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமை வகித்தார்.
அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார், ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
திருமதி திருமுருகன் ஒன்றிய குழு தலைவர்; ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தலா ரூ4, லட்சம் வீதம் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சின்னத்தம்பி (அதிமுக) மட்றபள்ளி கிராமத்தில் வார சந்தைக்கு குறைந்தது 1000 மாடுகள், ஆடுகள், விற்பனைக்கு வருகிறது மாடுகளை லாரியில் இருந்து இறக்க சாய்வு தளம் ஏற்படுத்தி தர வேண்டும்
டாக்டர் லீலா சுப்ரமணியம் (அதிமுக;) ஆதியூரிலிருந்து எலவம்பட்டி செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் 3 அடி மேலே கையில் தொடும் அளவில் உள்ளது. இதனால் விபத்துக்கள் நேரலாம் உடனடியாக கந்திலி ஒன்றியம் சார்பில் மின்சார துறைக்கு கடிதம் எழுதி மின்சார கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும், மேலும் ஆதியூர் முதலியார் தெரு பகுதியில் தண்ணீர் ஏற்படுத்தி தர வேண்டும், ஆலமரத்து வட்டம் பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்
சாந்தகுமார் (திமுக;) : அருந்ததியர் காலனி வீடுகள் முழுவதும் பழுதடைந்து உள்ளது உடனடியாக புதிய வீடு கட்டி தர வேண்டும் அல்லது அந்த வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தரவேண்டும், லக்கினநாரக்கன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்டு வரும் தார் சாலை இரண்டு வருடமாக போடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது உடனடியாக சாலை போட நெடுஞ்சாலைத்து றையினருக்கு கடிதம் எழுத வேண்டும்.
தலைவர் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
கந்திலி ஊராட்சி உடையாமுத்தூர் சமத்துவபுரத்தில் வீடுகள் புனரமைப்பு செய்ய வெளிப்புறத்தில் கம்பி வேலிகள் அமைக்கவும் அங்கன்வாடி கழிப்பறைகள் பழுது பார்ப்போம். பெரியார் சிலைக்கு சுற்று சுவர் அமைக்க ரூ 6 லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்ய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கலாம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம், கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.86 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 16 நெல் சேமிப்பு சைலோ கொள்கலன்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, இணையதளத்தில் விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.mangalammasala.com என்ற வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி (செல்போன் அப்ளிகேசன்) ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 22 வகுப்பறை கட்டிடத்தை தலைமை செயலகத்தில் இருந்தவாறு எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், அரியலூர், தர்மபுரி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalanisamy #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்