என் மலர்
நீங்கள் தேடியது "school student"
- அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.
- பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
- பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் பெருமாநல்லூர் நியூகாளிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகன் சுதர்சன் (வயது 14). பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுதர்சனின் கண் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்தால் சத்தம் போடுவார்கள் என்று பயந்த சுதர்சன், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.
- படுகாயமடைந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாணவனின் நலம் விசாரித்தார். சிகிக்சைக்கான செலவை முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அறிவித்தார்.
- சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
- வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளகோவில்:
முத்தூா் சின்னமுத்தூா் பழனியப்பபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் அரிச்சந்திரன் என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் மதீஷ் (வயது 13) சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
இவா் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வர தாமதமாகியுள்ளது. இதனால் அவரது தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றவா் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- திலீபன் மற்றும் அவனது தம்பி வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
- ஒழுங்காக படிக்க வேண்டும் எனகண்டித்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடத்தை அருகே உள்ள சுக்கம்பாளையம் காலனி பகுதியை சேர்தவர்கள் சேகர் - சத்யா தம்பதியர்.இவர்களுக்கு திலீபன்(வயது13) மற்றும் அகரன்(8) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திலீபன் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம் போல திலீபனது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், திலீபன் மற்றும் அவனது தம்பி வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனிடையே திலீபன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவனது தம்பி அகரன் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அறைக்குள் சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த திலீபனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவனது தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வரும் திங்கட்கிழமை அன்று பள்ளியில் அவனுக்கு தேர்வு நடைபெற உள்ளதால், அவனது தாயார் நீ எங்கும் விளையாட போகக்கூடாது, ஒழுங்காக படிக்க வேண்டும் எனகண்டித்ததாக கூறப்படுகிறது. உடன் படிக்கும் நண்பர்கள் விளையாடும் போது தான் மட்டும் படிப்பதா என வேதனையில் இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார்.
- மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையால் மூடி வைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதி புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி (48). இவரது ஒரே மகன் அபிராம் (16). அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.
அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் பலகையால் மூடி வைத்துள்ளனர்.
இதனை கவனிக்காத அபிராம் பலகையில் கால் வைத்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரும் பள்ளி மாணவன் மீது விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி மாணவனின் தாயார் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் குழியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் செக்கடிப்பட்டி அர்ஜுன தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் விஷ்வா (வயது 17).
நாகராஜன் குடும்பத்துடன் மும்பையில் வேலை செய்து வருகிறார். இதனால் விஷ்வா தனது தாத்தாவான கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பிளஸ்-2 படித்து வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவரது அத்தை வீட்டில் அருகில் வசிக்கும் பெண்ணும் விஷ்வாவும் காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் விஷ்வாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் விஷ்வா செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையில் தூக்கு போட்டுக்கொண்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் விஷ்வா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில்பட்டி அருகே உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.
- அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உடைகள், பாய், மளிகை சாமான், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர். இதேபோல் செம்புதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கு வந்திருந்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கினர். பள்ளி முதல்வர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து காப்பக நிர்வாகி தேன்ராஜா மற்றும் ஊழியர் அந்தோணி ரோசி அவர்களிடம் பொருட்களை வழங்கினர்.
- மானாமதுரை அரசு பள்ளி மாணவியை அமைச்சர் பாராட்டினார்.
- முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி இலக்கியாவுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கினார். ஆட்டோ தொழிலாளியான விஜயகுமாரின் மகள் இலக்கியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று, சிவகங்கை மாவட்டத்தல் அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பிடித்தார்.
இந்த நிலையில் மானாமதுரை வந்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மாணவி இலக்கியா வீட்டுக்கு சென்று அவருக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கினார்.அப்போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் துரை.ராஜாமணி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
- ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
- தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
ராயபுரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). பஸ் கண்டக்டர். தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் தயானந்த மூர்த்தி (வயது 57). பஸ் டிரைவர். தண்டையார்பேட்டை பஸ் டிப்போவை சேர்ந்த பஸ் நேற்று தடம் எண் 44 கட் பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. வரை செல்லும் பஸ்சில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் ஏறிய 5 பள்ளி மாணவர்கள் பஸ்சில் பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து ரகளை செய்துள்ளனர்.
பின்னர் பஸ் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் பள்ளி மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் அதில் ஒரு மாணவன் சாலையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கண்டக்டரை தாக்க முயன்றார். அப்போது கண்டக்டர் அதைத் தடுத்துள்ளார். மேலும், பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கண்டக்டர் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பஸ்சை நிறுத்தி கண்டக்டர் அதன் முன் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து கண்டக்டர் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.
சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.
இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.