என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "schools closed"
- வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
- சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.
அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
- பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.
- வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
பாட்னா:
இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.
டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ் குமார், வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டார்.
- பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
- பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
அகர்தலா:
வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
- கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
டெல்லி:
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லி மக்கள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக, மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது.
வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, மாவட்டத்தில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.
எனவே, நான், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144ன் கீழ், பாட்னா மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின்(முன்பள்ளி மற்றும் அங்கன்வாரி மையங்கள் உட்பட) கல்வி நடவடிக்கைகளை 28.06.2023 வரை தடை செய்கிறேன்.
மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவு 26.06.2023 மற்றும் 28.06.2023 வரை அமலில் இருக்கும். 24.06.2023 அன்று எனது கையொப்பம் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
- மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆக உள்ளது.
இம்பால் :
மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed
பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #HimachalRains #Schoolsclosed
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்