search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Holiday"

    • நேற்ற இரவு முதல் மழை பெய்து வருகிறது.
    • காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

    தெற்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழைப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுறு்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

    பின்னர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். ஆனால் கல்லூரிகள் வழக்கும்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
    • பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் நேற்று ஒரே நாளில் 9.8 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
    • 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

    நகர் பகுதியில் காலை முதல் மதியம் 2 மணி வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டமாக மாறி சாரல் மழையாக பெய்த வண்ணமாக இருந்தது.

    உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை முதல் மாலை வரை 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர்  கொட்டித்தீர்த்துள்ளது. 

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புகுந்த மழைநீரின் நடுவே கட்டிலில் படுத்திருக்கும் மூதாட்டிகள்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    • தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
    • ராணிப்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அந்த பகுதியில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதைத்தொடர்ந்து வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    மேலும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம், இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
    • இதனால் கடந்த மாதமும் கூடுதல் வேலை நாளில் விடுமுறை விடப்பட்டது.

    சென்னை:

    ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதனால் கடந்த மாதமும் கூடுதல் வேலை நாளில் விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தற்போது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    • மும்பையில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
    • மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவின் புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் மும்பையில் நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடாலா மற்றும் ஜிடிபி நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கனமழையால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    • சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது.
    • காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவிப்பு.

    திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த நிலையில், அந்நகர பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    சிறுத்தை இருப்பதை கண்டு தப்பிக்க முயன்று கார் பார்க்கிங்கில் உள்ள காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • நெல்லையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
    • தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லையில் அதிகனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ×