search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sculptures"

    • யானை படமாக இருந்தால் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.
    • மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம்.

    தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

    வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

    அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாட்டும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

     * ஒற்றைக் கொம்பு கொண்ட யூனிகார்ன் குதிரை படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

     * வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும்.

    * ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

    * தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

     * சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில் படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

    * படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேஜையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

    * போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    * சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பாண்டியர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லி யல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாண்டியர் கால சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது:-

    உலக்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங் கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கமானது சதுர வடிவில் செதுக்கப்பட்டுள் ளது. இந்த சிவலிங்கத்தை ஊர் பொதுமக்கள் சில காலத்திற்கு முன்பு வரை வழிபட்டு வந்துள்ளனர். இந்த சிவலிங்கத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியரின் கைவண்ணத் தில் உருவானவையாகவும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதலாம்.

    சிவலிங்கத்தின் அருகே ஒரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்ப மானது ஒரு முற்று பெறாத சிற்பமாகும். தலைப்பகுதி கரண்ட மகுடமும், காது களில் காதணியும் தெளி வாக இடம்பெற்றுள்ளது. வலது கையானது கத்தியை பிடித்த படியும் இடது கையை கீழே தொங்கவிட்டும் அக்கரத்தில் தெளிவற்ற ஓர் ஆயுதம் இனங்கான முடி யாத நிலையில் உள்ளது.

    மேலும் இந்த சிற்பமானது 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம்.

    இதேபோல் உலக்குடி கிராமத்தின் பேருந்து நிறுத் தம் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் காணப்பட்டது. 4 அடி உய ரத்தில் 4 கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ளன. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும் இடது முன் கரத்தை கடிஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள் ளது.

    தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரிநூலும் இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் வடிக் கப்பட்டுள்ளது. உலக்குடி கிராமத்தில் இது போன்ற சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க் கும் போது முற்காலங்களில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும் என் றும் முற்காலங்களின் வர லாற்று சான்றுகள் நிறைந்த ஊராகவும் கருதலாம் என் றும் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பழங்கால வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடுமலை அருகே சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்திலுள்ள, ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவிலில் புடைப்பு சிற்பங்களும், கல்வெட்டும் காணப்பட்டது. கற்கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோவில் கட்டியவர்கள் பெயரும், அதில் பணியாற்றியவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது. கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் வரலாற்று சின்னமாக உள்ளது. புதுப்பிக்கும் போது கல்வெட்டு மற்றும் புடைப்பு சிற்பங்களை சேதப்படுத்தாமல் புதுப்பித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    மேலும் கால்நடைகளின் தேவைக்காக கல்தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சேவை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

    இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.

    மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.

    முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    • உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

    நெல்லை:

    உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர்

    சிவ.சத்திய வள்ளி கலந்து கொண்டு சிற்பங்களை பார்த்து அவை என்ன சிற்பங்கள் என்பது கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவிகளுக்கு நடத்தினார். மேலும் பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நடுகற்கள், சதிக்கற்கள் பற்றியும் விரிவான விளக்கத்தினை அளித்தார். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ந் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யானைகள் குறித்த வரலாற்று கதைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ந் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், அரசு அருங்காட்சியகம் மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள பாதுகாப்பு மையம் இணைந்து நெல்லை நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள யானை சிற்பங்கள் சொல்லும் கதைகள் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யானைகள் குறித்த வரலாற்று கதைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

    மேலும் வரலாற்றில் யானைகள் மூலம் செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் யானைகளின் தன்மைகள் குறித்து தஞ்சையில் இருந்து வந்த தென்னன் என்பவர் விளக்கமளித்தார்.

    இதனைத் தொடர்ந்து சிற்பங்களில் உள்ள யானைகள் படங்களை வரைவது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதியை மாணவ- மாணவிகள் கண்டு ரசித்தனர்.

    ×