என் மலர்
நீங்கள் தேடியது "seat"
- உடைந்த சீட்களில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை.
- இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி சீட் சேதமடைந்து இருந்தது.
இதுதொடர்பாக, சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த சீட் கொடுக்கப்பட்டதாக பதிவிட்டார்.
அதில், நான் போபாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்து இருந்தது. சக பயணிகள் இருக்கையை மாற்றி அமரும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.
டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?
ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
- இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன.
- இல்லத்தின் முன்பு அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மானம்பு சாவடியில் உள்ள வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக வீடற்றோர் தின விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார்.
வீடற்றோர் தினத்தை முன்னிட்டு அங்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வீடற்றோர் இல்லத்தில் தங்கி உள்ள முதியவர்கள், ஆதரவற்றவர்களிடம் மேயர் சண் ராமநாதன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும். ஏதாவது குறைகள் கூறினால் உடனுக்குடன் அது சரி செய்யப்படும்.
இந்த இல்லத்தின் முதல் மாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளன. மேலும் பூங்கா அமைய உள்ளது.
இல்லத்தின் முன்பு நீங்கள் அனைவரும் கலந்துரையாடி பேசுவதற்காக இருக்கைகள் போடப்பட உள்ளன.
வருகிற தீபாவளி பண்டிகை அன்று நான் உங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 5 பழங்குடியினா் நலப்பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சோ்ந்த 589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான வாய்ப்பு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், 88 அரசு மேல்நிலைப்பள்ளி, ஒரு ஆதிதிராவிட நலத்துறை பள்ளி, 5 பழங்குடியினா் நலப்பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகளைச் சோ்ந்த 589 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
இவா்களில் தோ்ச்சி பெற்றவா்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவா், 201-299 வரையில் 10 போ், 101-200 வரையில் 128 போ், 93-100 வரையில் 26 போ், 92-க்கு மேல் 424 போ் 102 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 691 மாணவ, மாணவிகளில் 589 போ் தோ்வு எழுதியதில் 165 மாணவா்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.நாகேஷ்வரன் 373 மதிப்பெண்களுடன் முதலிடம், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் டி.சரண் 280 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஆா்.சரண்விஷ்வா 260 மதிப்பெண்களுடன் 3-ம் இடம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் வி.பி.விஜய் 228, திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஏ.அஜித்குமாா் 221 மதிப்பெண்களுடன் 4,5-ம் இடங்களை பெற்றுள்ளனா். இவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 51 போ் தோ்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 165 பேராக அதிகரித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.