search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secretaries"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
    • வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்–துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் வருகிற 2-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்தில் அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், எனது முன்னிலையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தவறாமல் அனைத்து செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்ட தீர்மானம், வரைவு வாக்காளர் பட்டியல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
    • அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு கூறியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவது, குடிநீர்-சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை பணிகளை செய்வது, புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிய பணி விதிகள் அரசாணையை வெளியிட வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12-ந் தேதி) முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கோரிக்கைக்காக தொடர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் 3 தினங்களுக்கான விடுமுறை விண்ணப்பத்தை அளித்தனர். அப்போது தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் பாண்டியன், செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம், ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஊதியம் இல்லாத விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 429 ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நீங்கலாக மொத்தம் 396 ஊராட்சி செயலாளர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) விடுப்பு கடிதம் அளித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் உள்ள 35 ஊராட்சியில் 4 காலி பணியிடங்கள் நீங்கலாக 31 ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்கான விடுப்பு கடிதத்தை ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) மலைராஜனிடம் வழங்கியுள்ளனர். இத்தகவலை ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் ரவி தெரிவித்தார்.அப்போது ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன்,பொருளாளர் செந்தில்பொன் குமார் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×