என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "security guard"
- பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.
திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- யூனியன் அலுவலக காவலாளி குடிபோதையில் தவறிவிழுந்து இறந்தார்.
- மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணமாக வில்லை. ஆண்டிபட்டி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று இரவு பணிக்கு முருகன் வந்துள்ளார்.
அங்கு சேர்மன் அலுவல கம் முன்பு குடிபோதையில் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்த போது முருகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- டோனி ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
- டோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் டோனி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு முழுக்க முழுக்க ஐபிஎல் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், டோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில், செக்யூரிட்டி கார்டுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். அதாவது, டோனியின் பண்ணை வீடு மிகப்பெரியது. அதில், தனது பண்ணை வீட்டின் செக்யூரிட்டி கார்டை வீட்டிற்குள் இருந்து வெளியில் கேட் உள்ள இடம் வரையில் தனது பைக்கில் ஏற்றி வந்துள்ளார். இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.
- கார்த்திகேயன் காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
- காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தஞ்சாவூர் திருவையாறு பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் திருச்சி டிவிசனுக்கு உட்பட்ட காரைக்கால் ெரயில் நிலையத்தில், ெரயில் பாதுகாப்பு வீரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் நள்ளிரவு, காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ெரயில் நிலையத்தின் தங்கும் அறை அருகே, 2 ேபர் புகை பிடித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த கார்த்திகேயன், இங்கே புகை பிடிக்க கூடாது என கண்டித்துள்ளார். அதற்கு, நாங்கள் யார் என தெரியாமல் பேசுகிறீர்கள் என கூறி தகாதவார்த்தைகளால் திட்டி கார்த்திகேயனை 2 பேரும் தாக்கியுள்ளனர். கார்த்திகேயனின் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள், காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்த பைசல் (34), ரிஸ்வான் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.
- மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உடுமலை :
மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடும்பத் தகராறு காரணமாக சண்முகசுந்தரம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
- நேற்று இரவு ெரயில் நிலையம் அருகே உள்ள மட்டக்கடை பஸ் நிறுத்தத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடை 1-ம் கேட் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது53). இவர் லாரி செட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சண்முகசுந்தரம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் ஒரு வாரமாக வீட்டுக்கு செல்லாமல் இருந்த அவர் நேற்று இரவு ெரயில் நிலையம் அருகே உள்ள மட்டக்கடை பஸ் நிறுத்தத்தில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகி படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம், ஒத்தைவீதி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். (வயது 46) காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கலைச்செல்வி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.
காமராஜுக்கு இதய நோய் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
உடல் சரியானதால் மீண்டும் காவலாளி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கழிவறைக்கு செல்லும் போது தவறி விழுந்து விட்டார். உடனடியாக அவரது மனைவி கலைச்செல்வி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
பின்னர் பிற்பகல் 12 மணி அளவில் மீண்டும் கழிவறைக்கு கலைச்செல்வி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் கழிவறையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற காமராஜ் கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அதில் காயமடைந்த காமராஜை, கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதயநோயின் காரணமாகவாக அல்லது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.
அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.
இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நாவலூரை அடுத்த தாழம்பூரில் 28 மாடி கொண்ட புதிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 34) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியின் மேல் நாற்காலியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் குடிநீர் தொட்டிக்குள் சிவக்குமார் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு காவலாளி தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி காவலாளி சர்க்கரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும் போது, ‘நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவக்குமார் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் அவரை மீட்ட போது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
சிவக்குமார் காவல் பணியில் இருந்த போது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குடிநீர் தொட்டியில் தள்ளி விட்டனரா? என்பது குறித்து தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்