என் மலர்
நீங்கள் தேடியது "Seminary"
- சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
- ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.
முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.
நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.
முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.
- சரசுவதி நாராயணன் கல்லூரியில் பாதுகாப்பான பஸ் பயண கருத்தரங்கம் நடந்தது.
- மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பேசினார்.
மதுரை
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து மாணவர்கள் "பாதுகாப்பான பேருந்து பயணம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. மதுரை அரசு போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். துணை மேலாளர் அறிவானந்தம், போலீஸ் உதவி கமிஷனர் செல்வின் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில் இளைஞர்கள், மாணவர்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை வாங்கி அதன் தொழில்நுட்பம்பற்றி தெரியாமல் இருப்பதாலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.
பஸ்சில் இடம் இருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். அது ஆபத்தான பயணமாகும். கடந்த அக்டோபர் மாதம் முடிய இவ்வாண்டில் 600-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் இருளப்பன், ராமகிருஷ்ணன், விஜயகுமார் நன்றி கூறினர்.
- காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம் நடந்தது.
- 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் நியூ ஐடோலா இலக்கியமன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ''தற்கால இலக்கிய கோட்பாடுகள்'' என்ற தலைப்பில் நடந்தது.
துறைத்தலைவர் பெமினா வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான் சேகரை, உதவிப்பேராசிரியர் சாந்தி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஆய்வு கட்டுரையை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் சமர்பித்துள்ளார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் இலக்கிய கோட்பாடு என்றால் என்ன? என்பதை தகுந்த இலக்கிய ஆய்வுகள் மூலமாக எடுத்துக்கூறினார்.
இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அறிவு சார்ந்ததாகவும் அமைந்தது. உதவிப் பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
- இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.
இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
- இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
- கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லூரி, இலங்கை ஒப்பீட்டு சமயம், சமூக நல்லுறவு துறை கிழக்குப் பல்கலைக்கழகம், ஷான்லகஸ் நிறுவனம் சார்பில் இலக்கியங்களில் தமிழர் அறிவுருவாக்க முறைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கவுசானல் கல்லூரி கூட்ட அரங்கில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்.
முதுநிலை விரிவுரையாளர் நவரத்தினம் கருத்துரை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் ராமர் நோக்க உரை ஆற்றினார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிவகுரு வாழ்த்துரை வழங்கினார். அறிவு மணி மைய உரையாற்றினார். முன்னதாக கவுசானல் கல்லூரி தமிழ் உயராய்வு மைய தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
- உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் ''வாய்ப்புக்களுக்கான பாதைகள்'' என்ற தலைப்பில் மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிவகாசி யூனோபி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநரும், முன்னாள் மாணவருமான விஜயபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் , கணினி அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பை எளிதில் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பது குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் வெவ்வேறான பதவிகள் குறித்து உரையாற்றினார். மாணவர்களிடம் எழுந்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
கணினி அறிவியல் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சகாய மேரி வரவேற்றார். இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் சூர்யா நன்றி கூறினார். இதில் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் கணினி அறிவியல் துறை மாணவ- மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர்.
கணினி அறிவியல் துறை பிரியா, பாராட்டுரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் முதன்மை உரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
- நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை (ELCOWARZ-2023) நடத்தியது.
பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி கருத்தரங்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 4-ம் ஆண்டு மாணவர் அய்யனார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ''மைண்ட்நோடிக்ஸ் டெக்னாலஜிஸ்'' நிறுவனர் சதீஷ்குமார் சேட்டு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு செயல்புரிய வேண்டும்.
மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். கனெக்சன். போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில் நுட்பம் சாராத போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசியர் ஒருங்கினைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.
- செய்யது ஹமிதா கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களாகிய மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி செல்வபிரபு, சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் சதீஷ்குமார் பாலு ஆகியோர் பங்கேற்று ேபசினர்.
நோய்க்கு காரணமான நுண்ணுயிரினங்களை கண்டறிவதற்கு பயன்படும் அனைத்து உபகரங்களைப் பற்றியும் அதனை கையாளும் முறைகளைப் பற்றியும் செல்வபிரபு எடுத்துரைத்தார். நானோ அறிவியல் பற்றியும், அதனுடைய வகைகளை குறித்தும், மருத்துவத்தில் நானோ அறிவியலின் தாக்கம் குறித்தும் சதீஷ்குமார் பாலு எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் ஆனந்த், ஷோபனா, விஜயகுமாரி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை சார்பில் வணிகத்தில் சமீபத்திய கணினி தொழில்நுட்ப பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ செளடாம்பிகா பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இரண்டாமாண்டு மாணவி பத்மகலா அனைவரையும் வரவேறறார். முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாணவர்களின் போட்டியிடும் திறனை வளப்படுத்த இத்தகைய கருத்தரங்குகள் அவசியம் என்றார்.
சிறப்பு விருந்தினர் முத்துக்குமார் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகளை சுட்டிக்காட்டினார். மேலும் நிலையான வளர்ச்சிக்கு கணினி சார்ந்த தொழில்நுட்பத்தின் தற்போதைய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். நிறைவாக, இரண்டாமாண்டு மாணவி அபிலட்சுமி நன்றி கூறினார். துறை தலைவர் நளாயினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணன் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கில் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறையைச் சேர்ந்த 238 மாணவிகள் கலந்துகொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
- நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.
வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
- இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.
கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான