என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "septic tank"

    ரவி (45) என்பவர் செப்டிக் டேங்கில் இறங்கி கருப்பு ஆயில் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரவி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தா

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன் மகன் ராஜ்முகமது (வயது 35) இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கின் உட்புறத்தில் கருப்பு ஆயில் அடிக்க வேண்டுமென தொழிலாளிகளிடம் கூறினார்.அதன்படி கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (45) என்பவர் செப்டிக் டேங்கில் இறங்கி கருப்பு ஆயில் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரவி எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தார்இதனை அறிந்த தொழிலாளிகளான சூளாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்( 37), பிரகாஷ் (29) ஆகியோர் செப்டிக் டேங்கில் இறங்கினர். இவர்களும் மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரவி, தர்மலிங்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர். இந்த சம்பவம் சூளாங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ம.பியில் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.
    • இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.

    இதுதொடர்பாக சிங்ராலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ்குமார் வர்மா கூறியதாவது:

    மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது.

    செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டேங்கில் கிடந்த 4 உடல்களை மீட்டனர்.

    இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரிபிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30). மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    முதல்கட்ட விசாரணையில், சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1-ம் தேதி வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்கள் செப்டிக் டேங்கில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    செப்டிக் டேங்கில் 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என சிறுமியின் தந்தை பழினிவேல் குறிப்பிட்டிருந்தார்.
    • சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை.

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அந்த மனுவில், விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என சிறுமியின் தந்தை பழினிவேல் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை.

    பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் கூறவில்லை.

    சிறுமி மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனு மீதான விசாரணையை தொடர்ந்து, தமிழக அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    • எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம்.
    • மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார்.

    சென்னை:

    சென்னை விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், ஐகோர்ட்டில், தாக்கல் செய்து உள்ள மனுவில், "எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பல முறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை.

    இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டது. கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 30-ந்தேதி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கினார். அப்போது அவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார். தகவல் கிடைத்ததும் வேலை செய்த இடத்தில் இருந்து நான் வீட்டுக்கு சென்றேன். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். முனுசாமி உடலை வெளியே எடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் வழங்கினேன்.

    இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3-வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவிக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில், "தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்.

    மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும்.

    இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்து உள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தலைநகர் டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரேம் நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கினர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களில் 2 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகவும் மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PoisonousGas #ToxicGas
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருமாள் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருக்கு 2 மகன்கள் இருந்தனர்.

    இன்று காலை அவர் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த லாரியை வரவழைத்து இருந்தார். தொழிலாளிகள் பாதி அளவு கழிவுகளை எடுத்துக் கொண்டு லாரியை எடுத்துச் சென்றனர்.

    எவ்வளவு கழிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பார்ப்பதற்காக கிருஷ்ண மூர்த்தி தொட்டியை எட்டிப் பார்த்தார். அப்போது அவர் மீது வி‌ஷவாயு தாக்கியது. மயக்கம் அடைந்த அவர் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதனை கண்ட அவரது 2 மகன்களும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசித்த 3 ஆண்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கிருஷ்ண மூர்த்தியையும், அவரது 2 மகன்களையும் மீட்க முயன்றனர். அவர்களும் வி‌ஷவாயு தாக்கி பலியானார்கள்.

    அடுத்தடுத்து 6 பேர் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் இன்று சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒரு பெண் உள்பட 5 துப்புரவு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்துக்கு உட்பட்ட டுர்கி  கிராமத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு பெண் தொழிலாளி இன்று இறங்கினார். தொட்டியில்  இருந்து வெளியான நச்சுவாயுவினால் மூச்சுத்திணறிய அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அடுத்தடுத்து 5 தொழிலாளிகள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர்.

    அவர்கள் 5 பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமெண்ட் காரையை உடைத்து அவர்கள் 6 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியபோது 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Rameswaram #BulletsRecover
    ராமேஸ்வரம்:

    ராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான எடிசன் இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதுகுறித்து எடிசன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களைக் கைப்பற்றினர். சுமார் 50-க்கு மேற்பட்ட பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 41 இலகுரக மெஷின்கன்கள், 22 மெஷின்கன்கள் உள்ளிட்ட பலவகையான துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

    விசாரணையில், இந்த வகையான அனைத்து தோட்டாக்களும் 15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஆயுதங்கள், தோட்டாக்கள் 15 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×