என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sister in law"
- தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார். இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.
அப்போது கட்டிலில் அமர்ந்திருந்த மாமியார் எழுந்து வந்து மருமகளின் கன்னத்தில் அறைகிறார். பிறகு, நாத்தனார் மீண்டும் பெண்ணை தாக்கி அவளது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.
பின்னர், பெண்ணை வெளியே தள்ளி மாமியார் மற்றும் நாத்தனார் அறையை பூட்டியுள்ளனர். அப்போது தரையில் கிடந்த பெண் தனது மாமனாரிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.
அவளைக் கொல்லுங்கள், முழு பலத்துடன் கொல்லுங்கள் என்று அவரது கணவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் சகோதரர் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சகோதரியை அவரது கணவர் கேசவ் குப்தா அவரது மாமியார், மாமனார் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.
- அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- சஞ்சீவிராயன் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி (வயது 32) இவருடைய கணவர் முனிசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தனது மகன், மகளை காப்பாற்ற ராணிப்பேட்டையில் உள்ள ஷு கம்பெனியில் கவுதமி வேலை பார்த்து வந்தார்.
கவுதமியின் தங்கை பிரியா என்பவரின் கணவர் சஞ்சீவிராயன் (35) கூலித் தொழிலாளி. இவருக்கு கவுதமி மீது ஆசை ஏற்பட்டது. அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கவுதமியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து கவுதமி சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் சஞ்சீவிராயனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று கவுதமி மற்றும் அதே ஊரை சேர்ந்த சுகன்யா, கோமளா 3 பேரும் வேலை முடிந்து தகரகுப்பம் பஸ் நிலையத்தில் இருந்து ஒட்டனேரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன் அங்கு வந்தார். அவர் கவுதமியை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் தாக்கினார். இதில் கவுதமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனியா, கோமளா இருவரும் ஊருக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். பொதுமக்கள் அங்கு வந்தபோது கொலை செய்த சஞ்சீவிராயன் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கவுதமியின் உறவினர்கள் சஞ்சீவிராயனை கைது செய்யாமல் பிணத்தை எடுக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த அரக்கோணம் டி.எஸ்.பி. கிரேஸ் யாதவ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதி அளித்தார்.
இதையடுத்து போலீசார் கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சஞ்சீவிராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23). இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
கரூரில் வட்டி கடையில் வேலை பார்த்த அன்பரசன் அந்த வேலையை விட்டு விட்டு மாமனார் வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு டிரைவர் வேலை பார்த்து வந்தார்.
அவரது மனைவியின் தங்கை திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அன்பரசனுக்கு மனைவியின் மீது இருந்த மோகம் அவரது தங்கையின் மீது திரும்பியது.
இதனால் அவரிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்தார். தனது கணவரும் தங்கையும் மாயமானதைக் கண்டு அன்பரசனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். மதுரை மாவட்டம் கப்பலூரில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து வந்தனர். அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அம்பிகாவதி (வயது40). சொத்து தொடர்பாக பெருமாளுக்கும், அவரது தம்பி தொழிலாளியான கோவிந்தன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பெருமாளை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு கோவிந்தன் சென்றுள்ளார். ஆனால் அங்கு பெருமாள் இல்லை. அவரது மனைவி அம்பிகாவதி மட்டும் இருந்தார். அவரிடம் கோவிந்தன் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் அடித்து உதைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அம்பிகாவதி திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்