என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sisters"
- தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- இருவரை பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே உள்ள நீலமலைக்குன்னு பகுதியை சேர்ந்த சகோதரிகள் பத்மினி (வயது74), தங்கம்(71). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பகலில் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்து குபுகுபுவென புகை வந்தது. அதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்தனர். அப்போது பத்மினியின் வீட்டுக்குள் தீப்பிடித்து எரிந்தது.
பத்மினி மற்றும் தங்கம் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபருக்கு கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.
அவரிடம் அக்கம்பக்கத்து வீட்டினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதற்கு அந்த நபர், வீட்டுக்குள் தீப்பிடித்தததை பார்த்து அதில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நபர் மீது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் சகோதரிகளின் வீட்டில் சிக்கிய நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் பட்டாம்பி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(48) என்பது தெரியவந்தது.
சகோதரிகளின் வீட்டுக்குள் சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் கேட்டபோது, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காகவே சகோதரிகளின் வீட்டுக்குள் வந்ததாகவும், அப்போது தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.
மணிகண்டனுக்கு எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறது? என்று பார்த்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ் மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. அதுபற்றி போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த நகைகள் தீயில் கருகி இறந்த சகோதரிகளின் நகைகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்க நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் 2 பேரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவலை மணிகண்டன் தெரிவித்தார்.
மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கிறார். அப்போது சகோரிகள இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவர், அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருகிறார்.
ஏற்கனவே வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று மூதாட்டி பத்மினியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பட்டப்பகலில் பத்மினி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். இதனால் பத்மினி சத்தம் போட்டிருக்கிறார்.
தனது அக்காளின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த தங்கம் வந்திருக்கிறார். அவர் மணிகண்டனுடன் தனது அக்காள் போராடுவதை பார்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மணிகண்டனின் கொள்ளை திட்டத்தை முறியடிக்க முயன்றிருக்கிறார்.
அப்போது மணிகண்டன், சகோதரிகள் இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த நகைகளை மணிகண்டன் எடுத்துக் கொண்டார்.
சகோதரிகள் தப்பிவிட்டால் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீவைத்தார். இதில் வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்தது.
சகோதரிகள் இருவரின் மீதும் தீப்பிடித்தது. உடலில் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சகோதரிகள் இருவரும் பயங்கரமாக அலறியுள்ளனர். வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்ததால், தீ வைத்த மணிகண்டனுக்கு முகம் மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்களிடம் இருந்து மணிகண்டனால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. அதன்பிறகும் காப்பாற்ற வந்ததாக கூறி தப்பித்துவிடலாம் என்று மணிகண்டன் கருதி, அதனையே தெரிவித்தார்.
ஆனால் திருடிய நகைகளை உள்ளாடைக்குள் வைத்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டதால் வசமாக சிக்கினார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீக்காயம் இருப்பதால் போலீசாரின் கண்காணிப்பில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் இருவரை, பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
- துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்
புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.
இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.
துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- மதுரை அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
- மத்திய அரசுக்கு எதிராக எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை
மதுரை காந்திபுரம் பகுதியில் உள்ள வீட்டில் சகோதரிகள் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு மத்திய அரசுக்கு எதிராக எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 2 பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த குணாஜோதிபாசு மனைவி நந்தினி (29), ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்